Skip to main content

Posts

Showing posts from May, 2019

தேங்காய் பராத்தா - Coconut Paratha

தேங்காய் பராத்தா மிக எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய எளிமையான உணவாகும். எந்த வயதினருக்கும் ஏற்றது.   தேவையான பொருட்கள் கோதுமை மாவு - 2 கப் தேங்காய்காய் துருவல் - 1 கப் பச்சை மிளகாய் - 1, பொடியாக நறுக்கிக் கொள்ளவும் புதினா - 4 இலைகள் கொத்தமல்லி இலை - சிறிதளவு நெய் - 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் தேவையான அளவு உப்பு தேவையான அளவு செய்முறை ஒரு அகலமான பவுலில் கோதுமை மாவு, நெய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மாவு கைகளில் ஒட்டாத பதம் வரும் வரை பிசைந்து கொள்ளவும். மாவின் மேலே சிறிது எண்ணெய் தடவி 20 நிமிடங்கள் வைக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் புதினா சேர்த்து லேசாக வதக்கவும். பின் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வதக்கவும். அவை நன்கு வதங்கியதும் ஒரு சிறிய கிண்ணத்தில் மாற்றி ஆறவிடவும். பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பின் சிறிய சப்பாத்தியாக போட்டு நடுவில் 1 டேபிள் ஸ்பூன் வதக்கிய தேங்

கார வடை - பட்டாணி பருப்பு போண்டா - Kara Vadai

எந்த ஒரு விசேஷம் அல்லது வீட்டில் நடக்கும் பார்ட்டிக்கு நாம் பெரும்பாலும் உளுந்த வடை அல்லது பஜ்ஜி செய்வதுண்டு. ஒரு மாறுதலுக்கு இந்த சுவையான பட்டாணி பருப்பு  கார போண்டா செய்து பாருங்கள். பட்டாணி பருப்பு கார போண்டா வெளியே முறுகலாகவும் உள்ளே மிருதுவாகவும் இருக்கும். இந்த போண்டா நேரமானாலும் அதன் சுவை மாறாது.  தேவையான பொருட்கள் 1.25 கப் பட்டாணி பருப்பு 1 கப் உளுத்தம்பருப்பு 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு 2 வெங்காயம், பொடியாக நறுக்கியது 2 பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது சிறிதளவு கொத்தமல்லி இலை சிறிதளவு புதினா சிறிதளவு கறிவேப்பிலை உப்பு தேவையான அளவு கடலை எண்ணெய் செய்முறை ஒரு அகலமான பாத்திரத்தில் பட்டாணி பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பை அளந்து எடுத்துக் கொள்ளவும். பின் 2 கப் தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊறவைக்கவும். பின் தண்ணீரில் 3 முறை நன்கு கழுவி விட்டு தண்ணீரை முழுவதும் வடித்து வைக்கவும். கிரைண்டரை நன்றாக தண்ணீரில் கழுவி விட்டு ஊறவைத்த பருப்பை சேர்த்து அரைக்கவும். சிறிது தண்ணீர் தெளித்து நன்கு பொங்க பொங்க அரைத்துக் கொள்ளவும். மாவு வெண்ணெய் போல் நன்கு மிருதுவாக இருக்கும

கருப்பு உளுந்து சின்ன வெங்காயம் சட்னி - Small Onion Black Urid dal Chutney

கருப்பு உளுந்து, சின்ன வெங்காயம், பூண்டு பற்கள் மற்றும் மிளகாய் வற்றலை வறுத்து அரைக்கவும். இதில் வறுத்த கருப்பு உளுந்தை கடைசியாக சேர்த்து அரைக்கவும். இந்த சட்னி இட்லி, தோசை, கேப்பை தோசைக்கு நன்றாக இருக்கும்.  தேவையான பொருட்கள் 15 சின்ன வெங்காயம் 5 பூண்டு பற்கள் 1.5 டேபிள் ஸ்பூன் கருப்பு உளுந்து 8 காய்ந்த மிளகாய் சிறிது புளி 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் சிறிது கல் உப்பு செய்முறை சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு பற்கள் தோலை உரித்து கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் கருப்பு உளுந்தம் பருப்பை சேர்த்து நன்கு வாசம் வரும் வரை வறுத்து தனியே எடுத்து வைக்கவும். பின் அதே வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் காய்ந்த மிளகாய் சேர்த்து லேசாக வறுத்து தனியே எடுத்து வைக்கவும். பின் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு பற்கள் சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை வறுத்துக்கொள்ளவும். அடுப்பை அனைக்கும் போது புளியை சேர்க்கவும். ஒரு சிறிய சட்னி ஜாரில் கல் உப்பு மற்றும் வறுத்த காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். (புளியை ஊறவைத்து ச

வெந்தய மிளகாய் - Green Chilly Pickle

பச்சை மிளகாயிலுள்ள கேப்சிக்கோ என்ற வேதிப்பொருள் பல்வேறு மருத்துவ குணங்களுடைய வெந்தயத்தோடு சேர்ந்து நாவிற்கு சுவையான சைட் டிஷை அளிப்பதோடு நமது உடலுக்குத் தேவையான பல நன்மைகளைத் தருகிறது. மேலும் எண்ணெயில் பச்சைமிளகாயை வதக்குவதால் காரம் குறைவாக இருக்கும்.   தேவையான பொருட்கள் பச்சை மிளகாய் - 25 வெந்தயம் - 2 டீஸ்பூன் கட்டிப் பெருங்காயம் ‌‌ - சிறிய துண்டு நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை பச்சை மிளகாயை நன்கு கழுவிக் கொள்ளவும். பின் ஒரு வெள்ளை துணியால் ஈரம் இல்லாமல் துடைத்துக் கொள்ளவும். பின் நடுவில் கீறிக் கொள்ளவும். ஒரு வாணலியில் வெந்தயத்தை போட்டு வாசம் வரும் வரை வறுத்துக்  கொள்ளவும். பின் ஒரு தட்டில் மாற்றவும். அதே வாணலியில் ஒரு துளி எண்ணெய் விட்டு கட்டி பெருங்காயத்தை போட்டு பொரிந்ததும் அடுப்பை அணைத்து விடவும். பின் ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் வறுத்த வெந்தயம், வறுத்த காயம் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பொடித்துக் கொள்ளவும். இப்போது ஒரு சிறிய ஸ்பூன் வைத்து சிறிதளவு பொடித்த பொடியை ஒவ்வொரு பச்சை மிளகாயின் நடுவில் வைத்து 2 பக்களிலும் தடவவும்

தக்காளி வெங்காய சப்ஜி - Tomato Onion Sabji

சப்பாத்திக்கு பத்தே நிமிடத்தில் சுவையான சப்ஜி. இந்த சப்ஜியில் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து செய்யப்படும். சிறிதளவு தக்காளியை  அரைத்து சேர்த்தால் தொக்கு போல் கெட்டியாக இருக்கும் .  தேவையான பொருட்கள் 2 வெங்காயம் 4 நன்கு பழுத்த தக்காளி 2 பச்சை மிளகாய் 1/2 டீஸ்பூன் கடுகு 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு சிறிது கறிவேப்பிலை 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள் 1/2 டீஸ்பூன் தனியா தூள் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் உப்பு தேவையான அளவு செய்முறை 1. வெங்காயம் மற்றும் 2  தக்காளியை மெலிதாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும். 2 தக்காளியை அரைத்துக் கொள்ளவும். 2. வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து பின் நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும். அவை வதங்கியதும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். 3. பின் நறுக்கிய தக்காளி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். தக்காளி லேசாக நிறம் மாறிய பின் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும். 4. அவை வதங்கியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள் மற்றும

உளுந்தம் பருப்பு சோறு - Black Urid Dal Rice (Ulundham Paruppu Sadham)

உளுந்தம்பருப்பு சோறு - கருப்பு உளுந்து, அரிசி, தேங்காய் துருவல் மற்றும் வெந்தயம் சேர்த்து ஒரு ஆரோக்கியமான சாதம். இந்த சாதத்தை எள்ளு துவையல் போட்டு பிசைந்து அவியல் வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.  தேவையான பொருட்கள் புழுங்கல் அரிசி - 1கப் கருப்பு உளுந்தம் பருப்பு - 1/4 கப் மற்றும் ஒரு கை வெந்தயம் - 1 டீஸ்பூன் பூண்டு பற்கள் - 10 தேங்காய்த்துருவல் - 1/2 கப் தண்ணீர் - 3 கப் நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை வாணலியை அடுப்பில் வைத்து லேசாக சூடாக்கி அதில் வெந்தயத்தை சேர்த்து வறுக்கவும். வெந்தயம் லேசாக வெடிக்க ஆரம்பித்ததும் கருப்பு உளுந்தம் பருப்பை சேர்த்து நன்கு  வாசனை வரும் வரை வறுக்கவும்.  ஒரு அகலமான பாத்திரத்தில் அரிசியோடு வறுத்த பருப்பையும் சேர்த்து நன்கு கழுவி விட்டு 1 கப் தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும். ஒரு பிரஷர் குக்கரில் ஊறவைத்த அரிசி, மேலும் 2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும். பின் அதில் தேவையான அளவு உப்பு, தேங்காய் துருவல் மற்றும் நல்லெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். குக்கரை மூடி வைத்து 3 விசில் வரும் வரை

காரக்குழம்பு - Karakuzhambu

இந்த காரக்குழம்பை ஒரு நாள் மதிய உணவாக ஹோட்டலில் சாப்பிடும் போது சுவைத்தேன். மிகவும் அருமையாக இருந்தது. பின் வீட்டில் வந்து செய்து பார்த்தேன்.  இந்த காரக்குழம்புக்கு மசாலா பொருட்கள் வறுக்கும் போது பதமாக வாசனை வரும் வரை வறுக்கவும். அதேபோல் குறிப்பிட்டள்ள அளவுக்கு மேல் பொருட்கள் சேர்க்க வேண்டாம். ஏனென்றால் குழம்பு கெட்டியாகிவிடும். இந்த குழம்பு தண்ணியாகவும் இருக்கக்கூடாது கெட்டியாகவும் இருக்கக்கூடாது. இதில் சுண்டைக்காய் வற்றலுக்கு பதிலாக கத்திரிக்காய் அல்லது மணத்தக்காளி வற்றல் வைத்து செய்யலாம்.  தேவையான பொருட்கள் 10 சின்ன வெங்காயம் 7 பூண்டு பற்கள் 1 தக்காளி 2 டேபிள் ஸ்பூன் சுண்டைக்காய் வற்றல் 2 காய்ந்த மிளகாய் 2 டீஸ்பூன் சாம்பார் பொடி 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள் சிறிது கறிவேப்பிலை 1/2 டீஸ்பூன் கடுகு 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு 1/4 டீஸ்பூன் வெந்தயம் 7 டேபிள் ஸ்பூன் கடலை எண்ணெய் உப்பு தேவையான அளவு அரைக்க 1 டேபிள் கடலைப்பருப்பு 1 டேபிள் ஸ்பூன் தனியா 1 டீஸ்பூன் சீரகம் 1 டீஸ்பூன் சோம்பு 1/4 கப் தேங்காய் துருவல் 6 சின்ன வெங்காயம் 1 தக்காளி 6 காய்ந்த மிளகா

திருநெல்வேலி சாம்பார் - Tirunelveli Sambar

திருநெல்வேலி சாம்பாரின் சிறப்பு என்னவென்றால் இதில் சேர்க்கும் தேங்காய், சின்ன வெங்காயம், பூண்டு மற்றும் சீரகம் சேர்த்து அரைக்கும் விழுது. சாம்பாரின் சுவை அதில் சேர்க்கும் காய்கறிகளில் அடங்கியுள்ளது. முருங்கைக்காய், வெண்டைக்காய், கத்திரிக்காய், மாங்காய் மற்றும் சின்ன வெங்காயம் முக்கிய காய்கறிகளாகும்.  தேவையான பொருட்கள் 1/4 கப் துவரம்பருப்பு 1 டேபிள் ஸ்பூன் புளி 1 முருங்கைக்காய் 1 கத்தரிக்காய் 4 வெண்டைக்காய் 1 தக்காளி 12 சின்ன வெங்காயம் 2 பச்சை மிளகாய் 1/4 டீஸ்பூன் வெந்தயம் 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள் 2.5 டேபிள் ஸ்பூன் சாம்பார் பொடி 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள் சிறிது கறிவேப்பிலை சிறிது கொத்தமல்லி இலை 1/2 டீஸ்பூன் கடுகு 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் உப்பு தேவையான அளவு அரைக்க 4 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல் 3 சின்ன வெங்காயம் 2 பூண்டு பற்கள் 1/2 டீஸ்பூன் சீரகம் செய்முறை ஒரு பாத்திரத்தில் புளியை கொதிக்கும் நீரில் போட்டு 30 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும். துவரம்பருப்பை நன்றாக கழுவி விட்டு 1 கப் தண்ணீர் ஊற்றி ஊறவைத்து கொள்ளவும். ப

குடமிளகாய் உருளைக்கிழங்கு மசாலா - Capsicum Potato Masala

குடமிளகாய் மற்றும் உருளைக்கிழங்கை வைத்து ஒரு திடீர் சைட் டிஷ். எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம் அல்லது சப்பாத்தி, பூரிக்கு பரிமாறலாம். குடமிளகாயை அதிக நேரம் எண்ணெயில் வதக்கினால் அதன் நிறமும் சுவையும் மாறிவிடும். இதில் சாம்பார் பொடிக்கு பதிலாக சிறிது மிளகாய்த்தூள் அல்லது மிளகுத்தூள் சேர்த்து செய்யலாம். தேவையான பொருட்கள் 1 பச்சை குடைமிளகாய் 1 உருளைக்கிழங்கு 1/4 டீஸ்பூன் சீரகம் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் சாம்பார் பொடி 1 டேபிள் ஸ்பூன் புளிக்கரைசல் 1 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி இலை 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் உப்பு தேவையான அளவு செய்முறை குடைமிளகாய் மற்றும் உருளைக் கிழங்கை நீளமாக நறுக்கி கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம் சேர்த்து பொரிந்ததும் நறுக்கிய கிழங்கை சேர்த்து வதக்கவும். அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். உருளைக்கிழங்கு நன்கு வதங்கியதும் நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து வதக்கவும். தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.  குடைமிளகாய் லேசாக வதங்கியதும் புளிக்கரைசல் மற்றும் சாம்பார்  பொடி சேர்த்து 2 நிமிடங்கள் கெட்டியானதும் கொத்த

தக்காளி தேங்காய் சட்னி - Tomato Coconut Chutney

தக்காளி தேங்காய் சட்னி - இட்லி, தோசை, ரவா தோசை, பனியாரம் போன்ற உணவுகளுக்கு இந்த தக்காளி தேங்காய் சட்னி சுவையாக இருக்கும். இந்த சட்னிக்கு சின்ன வெங்காயம், தக்காளி மற்றும் மிளகாய் வற்றலை வதக்கி அரைத்து கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும். இதற்கு சின்ன வெங்காயம் வைத்து அரைத்தால் நன்றாக இருக்கும். தேவையான பொருட்கள் நன்கு பழுத்த தக்காளி - 1 சின்ன வெங்காயம் - 10 மிளகாய் வற்றல் - 7 தேங்காய்த்துருவல் - 1/4 கப் கடுகு - 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் செய்முறை சின்ன வெங்காயத்தை தோலுரித்துக் கொள்ளவும். தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.  வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் சின்ன வெங்காயத்தை சேர்த்து லேசாக வதக்கவும். பின் மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் தனியாக எடுத்து வைக்கவும்.  அதே வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.  ஒரு சிறிய சட்னி ஜாரில் ஆறவைத்த சின்ன வெங்காயம், மிளகாய் வற்றல் மற்றும் உப்பு சேர்த்து அ

பனீர் பட்டர் மசாலா - Paneer Butter Masala

வீட்டிலேயே சுவையான ஹோட்டல் ஸ்டைல் பனீர் பட்டர் மசாலா. இதற்கு நன்கு பழுத்த தக்காளி பழம் வைத்து செய்தால் நன்றாக இருக்கும். முந்திரிப் பருப்பை 1 மணி நேரம் நன்கு ஊறவைத்து அரைத்து சேர்த்தால் கிரேவி நன்கு கெட்டியாக இருக்கும்.  தேவையான பொருட்கள் 250 கிராம் பனீர் 6 பூண்டு 1 டீஸ்பூன் இஞ்சி 6 நன்கு பழுத்த தக்காளி 12 முந்திரிப்பருப்பு 1 பிரிஞ்சி இலை 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் 1 டீஸ்பூன் கஷ்மீர் மிளகாய் தூள் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள் 1/2 டீஸ்பூன் சர்க்கரை 1 டேபிள் ஸ்பூன் கஸுரி மேத்தி  இலைகள் 1 டேபிள் ஸ்பூன் ஃப்ரெஷ் கிரீம் உப்பு தேவையான அளவு செய்முறை 1. தக்காளியை நன்றாக கழுவிக்கொள்ளவும். பின் கத்தியால் x வடிவில் லேசாக கீறிக் கொள்ளவும்.பின் தண்ணீர் விட்டு வேகவைத்து கொள்ளவும். பின் தோலுரித்துக்கொள்ளவும். 2. ஒரு கிண்ணத்தில் முந்திரி பருப்பை இளஞ்சூடான தண்ணீரில் 1 மணி நேரம்ஊறவைக்கவும். பின் நைஸாக அரைக்கவும். 3. இஞ்சி பூண்டு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். பின் வேகவைத்த தக்காளியை நைசாக அரைத்துக்கொள்ளவும். 4. அகலமான கடாயில்

பீட்ரூட் தேங்காய்பால் ஜுஸ் - Beetroot Coconut Milk Juice

குழந்தைகளுக்கு செயற்கை கலர்  சேர்க்காமல் வீட்டிலேயே செய்திடலாம் ஆரோக்கியமான ரோஸ் மில்க். தேங்காயிலும், பீட்ரூட்டிலும் இருக்கும் சத்துக்கள் ஏராளம். வாரத்திற்கு ஒரு முறை இந்த ஜுஸ் எடுத்துக்கொண்டால் உடலிலுள்ள கழிவுகள் நீங்கும். தேவையான பொருட்கள் தேங்காய் - 1 மூடி பீட்ரூட் - சிறிய துண்டு அல்லது கால் கப் துருவிய பீட்ரூட் ஏலக்காய் - 3 செய்முறை தேங்காயை பிரவுன் நிறம் இல்லாமல் துருவிக் கொள்ளவும். பீட்ரூட்டை தோல் சீவி துருவிக் கொள்ளவும். ஒரு பெரிய மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், பீட்ரூட் துருவல் மற்றும் ஏலக்காய் சேர்த்து கால் கப் தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும். பின் அரிப்பில் வடிகட்டி பிழிந்து கொள்ளவும். மீண்டும் ஒரு முறை பிழிந்த தேங்காய் பீட்ரூட் விழுதை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை அரிப்பில் வடிகட்டி நன்கு பிழிந்து வடிகட்டிக் கொள்ளவும். நன்கு கலந்து பரிமாறவும்.

திருநெல்வேலி புளிக்குழம்பு - Tirunelveli Pulikuzhambu

திருநெல்வேலி புளிக்குழம்பு - இது பார்ப்பதற்கு வத்தக்குழம்பு போல் இருக்கும் ஆனால் இதன் செய்முறை வித்தியாசமாக இருக்கும். மிளகு, சீரகம், மிளகாய் வற்றல், தனியா, துவரம்பருப்பு, கறிவேப்பிலை முதலிய பொருட்களை நன்கு வறுத்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை புளிக்கரைச்சலோடு சேர்த்து செய்யும் குழம்பு. இதில் சின்ன வெங்காயம், பூண்டு பற்கள் மற்றும் சுண்டைக்காய் வற்றல் அல்லது கத்திரிக்காய் ஆகியவற்றை நல்லெண்ணெயில் வதக்கி குழம்பில் சேர்த்துக் கொள்ளவும். இதில் கடைசியாக சிறிது பொடித்த கருப்பட்டி அல்லது வெல்லம் சேர்த்து கொள்வதை மறந்து விடாதீர்கள். தேவையான பொருட்கள் பெரிய எலுமிச்சை அளவு புளி 15 சின்ன வெங்காயம் 15 பூண்டு பற்கள் 1 முருங்கைக்காய் அல்லது 4 கத்தரிக்காய் சிறிய துண்டு கருப்பட்டி 1/4 டீஸ்பூன் வெந்தயம் 1/2 டீஸ்பூன் கடுகு 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு சிறிது கறிவேப்பிலை 5 டேபிள் நல்லெண்ணெய் உப்பு தேவையான அளவு வறுத்து அரைக்க 9 காய்ந்த மிளகாய் 3 டீஸ்பூன் மிளகு 1 டீஸ்பூன் சீரகம் 2 டீஸ்பூன் துவரம்பருப்பு 1 டேபிள் ஸ்பூன் தனியா 1/2 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு 10 கறிவேப

சிறுகீரை தொவரம் (பொரியல்) - Sirukeerai Poriyal

சிறுகீரை தொவரம் (பொரியல்) - பொடியாக நறுக்கிய கீரையோடு சின்ன வெங்காயம் தாளித்து அரைத்த தேங்காய் விழுது, சிறிது வேகவைத்த பருப்பும் சேர்த்து சுவையான ஆரோக்கியமான பொரியல். இதை திருநெல்வேலி சமையலில் கொத்திக் கீரை என்று கூறுவோம். இதில் சிறுகீரைக்கு பதிலாக அரைக்கீரை, முளைக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை வைத்து செய்யலாம். தேவையானவை பொருட்கள் சிறுகீரை - 1 கட்டு பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 1/4 கப் வேகவைத்த பருப்பு - 3 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் - 1 மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன் எண்ணெய் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு அரைக்க தேங்காய்த்துருவல் - 4 டேபிள் ஸ்பூன் சின்ன வெங்காயம் - 3 பூண்டு பற்கள் - 2 காய்ந்த மிளகாய் - 1 சீரகம் - 1/2 டீஸ்பூன் செய்முறை சீறுகீரையின் இளம் தண்டுகளோடு இருக்கும் இலைகளை தண்டோடு சேர்த்து ஆய்ந்துக் கொள்ளவும். தண்ணீரில் இரண்டு முறை மண் போக கழுவிக் கொள்ளவும். பின் வரிசையாக அடுக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காய்த்துருவல், சின்ன வெங்காயம், பூண்டு பற்கள், மிளகாய் வற்றல் மற்றும் சீரகம் சேர்த்த

கும்பகோணம் கடப்பா - Kumbakonam Kadappa

கும்பகோணம் கடப்பா - பாசிப்பருப்பு உருளைக்கிழங்கு மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்து ஒரு சுவையான சைட் டிஷ். இடியாப்பம், ஆப்பம், இட்லி, தோசைக்கு இதை பரிமாறலாம்.  தேவையான பொருட்கள் 1/4 கப் பாசிப்பருப்பு 2 உருளைக்கிழங்கு 1 வெங்காயம் 1 தக்காளி 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன் கடுகு 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு சிறிது பட்டை 3 கிராம்பு 1 எலுமிச்சை சிறிது கொத்தமல்லி இலை சிறிது கறிவேப்பிலை 2 டேபிள்ஸ்பூன்‌ எண்ணெய் உப்பு தேவையான அளவு அரைக்க 1/2 கப் தேங்காய் துருவல் 2 பச்சை மிளகாய் 4 பல் பூண்டு சிறிய துண்டு இஞ்சி 1 டீஸ்பூன் சோம்பு 1/2 டீஸ்பூன் கசகசா 1 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை செய்முறை பாசிப்பருப்பை லேசாக வறுத்துக் கொள்ளவும். அவை ஆறிய‌ பின் தண்ணீரில் கழுவிக்கொண்டு குக்கரில் சேர்த்து 1 கப் தண்ணீர் மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து 4 விசில் வரும் வரை வேக வைத்து கொள்ளவும். ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சோம்பு, கசகசா, பொட்டுக்கடலை, பூண்டு மற்றும் இஞ்சி சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய்

வெஜிடபிள் பிரியாணி - ஈஸி வெஜிடபிள் பிரியாணி - Vegetable Biryani

குழந்தைகளுக்கு விடுமுறை நாட்களில் இந்த சுலபமான வெஜிடபிள் பிரியாணியை செய்து கொடுங்கள். பழைய பாஸ்மதி அரிசியை வைத்து செய்தால் 1 பங்கு அரிசிக்கு 2 பங்கு தண்ணீர் ஊற்றி வேகவிடவும். எந்த வகையான பிரியாணி அல்லது புலவ்விற்கு வீட்டில் ஃப்ரெஷ்ஷாக அரைக்கும் இஞ்சி பூண்டு விழுது வைத்து செய்தால் மணமாகவும் ருசியாகவும் இருக்கும். தேவையான பொருட்கள் 1 கப் பாஸ்மதி அரிசி 15 பூண்டு பற்கள் சிறிய துண்டு இஞ்சி 1 கேரட் 7 பீன்ஸ் 1 உருளைக்கிழங்கு 7 காலிஃப்ளவர் பூக்கள் 1/4 கப் பச்சை பட்டாணி 1 வெங்காயம் 2 பச்சை மிளகாய் 2 தக்காளி 1/4 கப் கொத்தமல்லி இலை 1/4 கப் புதினா 2 டேபிள் ஸ்பூன் கெட்டியான தயிர் 2 டீஸ்பூன் பிரியாணி மசாலா தூள் 1 எலுமிச்சை பழம் 1 பிரியாணி இலை 2 சிறிய துண்டு பட்டை 5 கிராம்பு 4 ஏலக்காய் சிறிது கல்பாசி 2 அன்னாசிப்பூ 2 டேபிள் நெய் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் உப்பு தேவையான அளவு செய்முறை ஒரு அகலமான பாத்திரத்தில் பாஸ்மதி அரிசியை சேர்த்து நன்கு கழுவிக் கொள்ளவும். பின் 1 கப் தண்ணீர் ஊற்றி 20 நிமிடங்கள் ஊறவைத்துக் கொள்ளவும். 20 நிமிடங்களுக்கு பின் தண்ணீரை மு

ப்ரோக்கோலி மசாலா - Broccoli Masala

ப்ரோக்கோலியை வைத்து சுவையான ஹோட்டல் ஸ்டைல் மசாலா. ப்ரோக்கோலியை அரைவேக்காடு வேகவைத்து அல்லது பச்சையாக சாப்பிட்டால் அதன் சத்துக்கள் முழுவதும் கிடைக்கும். இதில் ப்ரோக்கோலிக்கு பதில் காளான் வைத்து செய்யலாம். தேவையான பொருட்கள் 1 சிறிய ப்ரோக்கோலி 1 வெங்காயம் 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது 1/4 டீஸ்பூன் சீரகம் 3/4 டீஸ்பூன் மிளகாய்த்தூள் 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள் 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள் 1 டீஸ்பூன் சர்க்கரை 2 டேபிள் ஸ்பூன் ஃபரஷ் கிரீம் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் உப்பு அரைக்க 2 வெங்காயம் 2 தக்காளி 10 பாதாம் செய்முறை 1. ஒரு சிறிய குக்கரில் 2 வெங்காயம், 2 தக்காளி, பாதாம் சேர்க்கவும். 1 கப் தண்ணீர் விட்டு 1 விசில் வந்ததும் இறக்கவும். 2.  பெரிய பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பின் அதில் ப்ரோக்கோலி பூக்களை போட்டு மூடி வைக்கவும். பின் அதில் ஐஸ் கட்டிகள் போட்டு குளிர விடவும். 5 நிமிடங்கள் கழித்து தண்ணீரை வடிகட்டவும். 3. வேகவைத்த வெங்காயம், தக்காளி, பாதாம் பருப்பு சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். 4. கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் சீ

கொள்ளு தோசை - Kollu Dosa

காலை உணவிற்கு இட்லி மற்றும் தோசை தானா என்று கேட்பவர்களுக்கு இந்த ஆரோக்கியமான கொள்ளு தோசையை செய்து கொடுங்கள். மீண்டும் மீண்டும் வேண்டும் என்று  கேட்பார்கள். கொள்ளு பருப்பில் ஏராளமான நன்மைகள் உள்ளன. ஆனாலும் இதை அடிக்கடி உண்ணக்கூடாது.  மாதத்திற்கு இரண்டுமுறை சேர்த்தால் போதுமானது. தேவையான பொருட்கள்     இட்லி அரிசி - 1 கப்     பச்சரிசி - 1/2 கப்     கொள்ளு - 1.5 கப்     கல் உப்பு - தேவையான அளவு     நல்லெண்ணெய் - தேவையான அளவு செய்முறை  ஒரு பாத்திரத்தில் இட்லி அரிசி, பச்சரிசி மற்றும் கொள்ளுபருப்பு சேர்த்து தண்ணீரில் மூன்று முறை நன்கு கழுவிக்கொள்ளவும். பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 5 மணி நேரம் ஊறவைக்கவும்.  பின் மீண்டும் ஒரு முறை தண்ணீரில் கழுவிக் கொள்ளவும். கிரைண்டரில் ஊறவைத்தவற்றை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து அரைக்கவும்.  கிரைண்டரில் அரைக்கும் போது ஓரத்தில் இருக்கும் அரிசி, பருப்பை ஒதுக்கி விட்டு தண்ணீரை தெளித்து பொங்க பொங்க நன்கு அரைத்துக் கொள்ளவும். சுமார் 30 நிமிடங்கள் நன்கு அரைத்துக் கொள்ளவும்.  அரைத்த மாவை பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும். பின் தேவையான அ

பட்டாணி மசாலா - Green peas masala

https://virundhombaltamil.blogspot.com/2019/05/green-peas-masala.html பச்சை பட்டாணி மசாலா மிகவும் எளிதானது. 30 நிமிடங்களில் சுவையான மசாலா செய்ய வேண்டுமா இதை செய்து பாருங்கள். இதற்கு காய்ந்த பச்சை பட்டாணி மற்றும் நன்கு பழுத்த தக்காளி வைத்து செய்தால் மசாலா மிகவும் சுவையாக இருக்கும். தேவையான பொருட்கள் 1/2 கப் காய்ந்த பச்சை பட்டாணி 2 வெங்காயம் 3 தக்காளி 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள் 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன் மல்லித்தூள் 2 டீஸ்பூன் கரம் மசாலா தூள் 1 டீஸ்பூன் சர்க்கரை 1 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி இலை 1/2 டீஸ்பூன் நெய் 1/2 டீஸ்பூன் சோம்பு 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் உப்பு தேவையான அளவு செய்முறை காய்ந்த பச்சை பட்டாணியை 2 முறை கழுவி பின் 1 கப் தண்ணீரில் 4 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும். பின் குக்கரில் 4 முதல் 6 விசில் வேகவைத்துக் கொள்ளவும். வெங்காயத்தையும், தக்காளியையும் தனித் தனியாக அரைத்துக் கொள்ளவும். ஒரு அகலமான வாணலியில் எண்ணெய் விட்டு சோம்பு போட்டு பொரிந்ததும் வெங்காய விழுதை போட்டு வதக்கவும். அவை நன்கு சுருண்டு வதங்கியதும் தக்காளி விழுதை போட்டு வதக்கவும். இர

வாழைக்காய் புட்டு (பொடிமாஸ்) - Plantain Puttu

வாழைக்காய் புட்டு - பத்தே நிமிடத்தில் சுவையான சைட் டிஷ். வேகவைத்த வாழைக்காயை பொடியாக துருவி தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து இறக்கினால் சுவையான வாழைக்காய் புட்டு தயார். சாம்பார், ரசம் மற்றும் எந்த வகையான குழம்புகளுக்கும் சுவையாக இருக்கும். தேவையானவை பொருட்கள் வாழைக்காய் - 2 வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 2 தேங்காய் துருவல் - 1/4 கப் கறிவேப்பிலை - சிறிதளவு கடுகு - 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன் எண்ணெய் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை வாழைக்காயை நன்கு கழுவி ஓரங்களை நறுக்கிக் கொள்ளவும். பின் பாதியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நறுக்கிய வாழைக்காயை சேர்த்து மூடி வைத்து வேக விடவும். வாழைக்காயின் தோல் கருப்பாக மாறும் போது நடுவில் ஒரு கத்தியால் குத்திப் பார்த்தால் பூவாக இருக்கும். பின் தண்ணீரை முழுவதும் வடித்து ஒரு தட்டில் வைத்து ஆறவைத்து தோலை உரித்து கொள்ளவும். பின் கேரட் துருவியில் பொடியாக துருவிக் கொள்ளவும். வாழைக்காய் துருவலோடு தேவையான அளவு

வெஜிடபிள் புலவ் - Vegetable Pulav

வெஜிடபிள் புலவ் - குறைவான பொருட்கள் வைத்து சுலபமான வெஜிடபிள் புலவ். வீட்டில் நடத்தும் சிறிய பிறந்தநாள் பார்ட்டி அல்லது கெட் டு கெதர்(get together) போன்ற விசேஷங்களுக்கு இந்த புலவ் நன்றாக இருக்கும். இதற்கு எந்த வகையான மசாலா அல்லது குருமா வைத்து பரிமாறவும். தேவையானவை பொருட்கள் பாஸ்மதி அரிசி - 1/2 கப் தண்ணீர் - 1 கப் வெங்காயம் - 1, மெலிதாக நீளமாக நறுக்கியது பச்சை மிளகாய் - 2 கீறிக் கொள்ளவும் கேரட் - 1 நீளமாக நறுக்கவும் பீன்ஸ் - 4 நீளமாக நறுக்கவும் பச்சை பட்டாணி - 1/4 கப் பிரிஞ்சி இலை - 1 பட்டை - சிறிய துண்டு சீரகம் - 1/4 டீஸ்பூன் ஏலக்காய் - 2 கிராம்பு - 2 முந்திரிப்பருப்பு - 7 கொத்தமல்லி இலை - சிறிதளவு உப்பு - தேவையான அளவு நெய் - 1 டேபிள் ஸ்பூன் செய்முறை பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி தண்ணீரை முழுவதும் வடித்து கொள்ளவும். முந்திரிபருப்பை சிறிது நெய் விட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். ஒரு அகலமான கனமான கடாயில் நெய் விட்டு சூடானதும் பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் சீரகம் சேர்த்து நன்கு வாசனை வந்ததும் வெங்காயம் மற்றும் கீறிய பச்சை மிளகாய் ச

பாசிப்பருப்பு ஜவ்வரிசி பாயாசம் - Pasiparuppu Payasam

பாசிப்பருப்பு, ஜவ்வரிசி, வெல்லம் மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து செய்யும் தித்திப்பான பாயாசம். இதை அடிகனமான அல்லது வெண்கலம் பாத்திரத்தில் செய்தால் நன்றாக இருக்கும். பாயசத்திற்கு பாகு வெல்லம் சேர்த்து செய்தால் அதன் சுவை நன்றாக இருக்கும். பூஜை நிவேதனமாக இதை எளிதில் செய்திடலாம். தேங்காய்ப்பாலுக்கு பதிலாக தேங்காய்யை நைசாக அரைத்து சேர்த்து கொள்ளலாம். தேவையானவை பொருட்கள் 1/2 கப் பாசிப்பருப்பு 1/4 கப் ஜவ்வரிசி 1.25 கப் பாகு வெல்லம் 1 கப் தேங்காய்ப்பால் 10 உடைத்த முந்திரிப்பருப்பு 4 டேபிள் ஸ்பூன் நெய் செய்முறை வாணலியை அடுப்பில் வைத்து லேசாக சூடாக்கி அதில் பாசிப்பருப்பை சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும். பாசிப்பருப்பு பொன்னிறமாகும் போது ஜவ்வரிசியை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். பின் தண்ணீரில் இரண்டு முறை கழுவி விட்டு ஒரு சிறிய குக்கரில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 3 முதல் 5 விசில் வரும் வரை வேக வைத்து எடுக்கவும். பருப்பு வேகும் போது தட்டிய வெல்லத்தை 1/2 கப் தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும்.  வெல்லம் நன்கு கரைந்ததும் அடி கனமான பாத்திரத்தில் அல்லது வெண்கலம

திருநெல்வேலி கூட்டாஞ்சோறு - Tirunelveli Kootanchoru

கூட்டாஞ்சோறு - திருநெல்வேலியின் மிகவும் பிரபலமான மதிய உணவு. காய்கறிகள், பருப்பு, அரிசி மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்து ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான சோறு. இதற்கு நாட்டு வாழைக்காய், வெள்ளை கத்திரிக்காய், முருங்கைக்காய், கொத்தவரங்காய், மாங்காய் மற்றும் முருங்கைக்கீரை முக்கிய காய்கறிகளாகும். இந்த சோறு செய்து ஆறிய பின் இதில் இருக்கும் புளிப்பு மற்றும் காரம் சமமாக சேர்ந்து சுவையாக இருக்கும். இதற்கு கூழ் வத்தல் அல்லது அப்பளம் வைத்து பரிமாறவும் . தேவையான பொருட்கள் 2 கப் புழுங்கல் அரிசி 1/2 கப் துவரம்பருப்பு பெரிய எலுமிச்சை அளவு புளி 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள் 10 சின்ன வெங்காயம் 3 பச்சை மிளகாய் உப்பு தேவையான அளவு காய்கறிகள் 2 கேரட் 10 பீன்ஸ் 10 கொத்தவரங்காய் 2 முருங்கைக்காய் 7 கத்தரிக்காய் 1 வாழைக்காய் 1 உருளைக்கிழங்கு சிறிதளவு மாங்காய் துண்டுகள் 1 கப் முருங்கைக்கீரை இலைகள் அரைக்க 1 கப் தேங்காய் துருவல் 20 காய்ந்த மிளகாய் 15 சின்ன வெங்காயம் 10 பூண்டு பற்கள் 1 டேபிள்ஸ்பூன் சீரகம் தாளிக்க 1/2 கடுகு 1/2 டீஸ்பூன் உள

அவியல் - Aviyal

வாழைக்காய், கத்திரிக்காய், கேரட், பீன்ஸ் போன்ற பல காய்கறிகளை சேர்த்து சுவையான ஆரோக்கியமான அவியல். திருநெல்வேலியில் வெள்ளை கத்திரிக்காய் சேர்த்து செய்வது வழக்கம். சாம்பார், புளிக்குழம்பு மற்றும் உளுந்தம் பருப்பு சாதத்திற்கு அருமையாக இருக்கும்.  தேவையானவை பொருட்கள் வாழைக்காய் - 1 கேரட் - 2 பீன்ஸ் - 9 கத்திரிக்காய் - 7 உருளைக்கிழங்கு - 1 முருங்கைக்காய் - 7 துண்டுகள் மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன் புளித்த தயிர் - 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை - 10 உப்பு - தேவையான அளவு அரைக்க தேங்காய் துருவல் - 5 டேபிள்ஸ்பூன் சின்ன வெங்காயம் - 4 பூண்டு பற்கள் - 2 பச்சை மிளகாய் - 3 சீரகம் - 1 டீஸ்பூன் தாளிக்க கடுகு - 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன் செய்முறை கேரட்டை தோல் சீவி நீளமாக நறுக்கிக் கொள்ளவும். பீன்ஸையும் நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கை தோல் சீவி நீளமாக நறுக்கிக் கொள்ளவும். வாழைக்காய்யையும் தோல் சீவி நீளமாக நறுக்கிக் கொள்ளவும். கத்திரிக்காய் காம்பை நீக்கி பாதியாக நறுக்கி மீண்டும் நட

தேன் குழல் - பலகாரம் - Thenkuzhal

இந்த தேன் குழல் அரிசியை ஊறவைத்து அரைத்து செய்வது. அரிசியை அரைத்து செய்வதினால் இதன் நிறமும் சுவையும் அற்புதமாக இருக்கும். கீழே சில முக்கிய டிப்ஸ்களோடு விளக்கம் கொடுத்துள்ளேன். நீங்களும் வீட்டிலேயே சுவையான தேன்குழலை செய்து பாருங்களேன்.  தேவையான பொருட்கள் 2 கப் (500 கிராம்)   இட்லி அரிசி 1/2 கப் உளுந்தம்பருப்பு மாவு 1.5 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் 1 டீஸ்பூன் கருப்பு எள் 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள் 3/4 கப் தண்ணீர் 750 மில்லி தேங்காய் எண்ணெய் உப்பு தேவையான அளவு செய்முறை ஒரு அகலமான பாத்திரத்தில் அரிசியை எடுத்துக் கொள்ளவும். அதில் 5 கப் தண்ணீர் ஊற்றி 3 முதல் 4 மணி நேரம் ஊறவத்துக் கொள்ளவும். பின் 3 முறை தண்ணீரில் கழுவிக் கொள்ளவும். தண்ணீரை நன்கு வடிகெட்டி கொள்ளவும். பின் கிரைண்டரில் ஊறவைத்த அரிசியை சிறிது சிறிதாக சேர்த்துக் கொள்ளவும். சிறிது தண்ணீர் ஊற்றி அரைக்கவும். இடை இடையே டிரமின்  ஓரங்களில் ஒட்டும் அரிசியை ஒதுக்கி அரைக்கும் அரிசியோடு சேர்க்கவும். தண்ணீரை கவனமாக சிறிது சிறிதாக சேர்க்கவும். மாவு அரைக்கும் நேரத்தில் உளுந்தம்பருப்பு மாவை நன்றாக சலித்துக் கொள்ளவும். மாவு

நேந்திரம் பழம் அல்வா - Nenthram Pazham Halwa

நேந்திரம் பழம் அல்வா  பள்ளியிலிருந்து வரும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான மூன்று பொருட்களை  வைத்து  பத்தே நிமிடத்தில் தித்திப்பான அல்வா செய்திடலாம். நேந்திரம் பழம் மற்றும் வெல்லம் ஆகிய இரண்டு பொருட்களிலும் இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளதால் இந்த அல்வா எல்லா வயதினருக்கும் ஏற்ற இனிப்பாகும். தேவையான பொருட்கள் நன்கு பழுத்த நேந்திரம் பழம் - 3 பாகு வெல்லம் - 200 கிராம் நெய் - 4 டேபிள்ஸ்பூன் செய்முறை நேந்திரம் பழத்தின் தோலை உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெல்லத்தை நன்கு பொடித்துக் கொள்ளவும். ஒரு கனமான கடாயில் 2 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய பழத்தை போட்டு கைவிடாமல் வதக்கவும்.  பழம் நன்கு மசிந்து வரும் வரை கைவிடாமல் வதக்கவும். பழம் நன்கு வெந்ததும் துருவிய வெல்லத்தை போட்டு மேலும் சிறிது சிறிதாக நெய் விட்டு கிளறவும். வெல்லம் நன்கு கரைந்து பழத்தோடு சேரும் வரை கைவிடாமல் கிளறவும். அல்வா நன்கு ஒட்டாமல் நெய் மிதக்கும் வரும் வரை கிளறி இறக்கவும். சூடாக பரிமாறவும்.  குறிப்பு இந்த அல்வாவிற்கு நேந்திரம் பழத்தின் தோல் நன்கு கருப்பு நிறம

முட்டைக்கோஸ் கேரட் பீன்ஸ் தொவரம் (பொரியல்) - Cabbage Carrot Beans Poriyal

திருநெல்வேலியில் இதை கதம்ப பொரியல் என்று அழைப்பது வழக்கம். வாரத்தில் ஒரு நாள் இந்த பொரியலை கட்டாயம் செய்வதுண்டு. சாம்பார், ரசம் மற்றும் எந்த வகையான குழம்புகளுக்கும் சுவையாக இருக்கும். இந்த பொரியல் மீதம் இருந்தால் இரவு சுவையான கதம்ப பொரியல் ஊத்தப்பம் செய்திடுவோம். தேவையான பொருட்கள் முட்டைக்கோஸ் - 250 கிராம் கேரட் - 1 பீன்ஸ் - 7 பச்சை பட்டாணி - 1/4 கப் தேங்காய் துருவல் - 1 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு கடுகு - 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் - சிறிது எண்ணெய் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு அரைக்க தேங்காய் துருவல் - 4 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் - 1 சின்ன வெங்காயம் - 3 பூண்டு - 1 சீரகம் - 1/4 டீஸ்பூன் செய்முறை முட்டைக்கோஸை நன்கு கழுவி தண்டுகளை பிரித்து பொடியாக நறுக்கவும். கேரட் மற்றும் பீன்ஸை பொடியாக நறுக்கவும்.  ஒரு அகலமான பாத்திரத்தில் நறுக்கிய காய்கறிகள் மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் வைத்து வேகவிடவும். அவை வேகும் போது தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சின்ன வெ