Skip to main content

பனீர் பட்டர் மசாலா - Paneer Butter Masala

வீட்டிலேயே சுவையான ஹோட்டல் ஸ்டைல் பனீர் பட்டர் மசாலா. இதற்கு நன்கு பழுத்த தக்காளி பழம் வைத்து செய்தால் நன்றாக இருக்கும். முந்திரிப் பருப்பை 1 மணி நேரம் நன்கு ஊறவைத்து அரைத்து சேர்த்தால் கிரேவி நன்கு கெட்டியாக இருக்கும். 



தேவையான பொருட்கள்
  • 250 கிராம் பனீர்
  • 6 பூண்டு
  • 1 டீஸ்பூன் இஞ்சி
  • 6 நன்கு பழுத்த தக்காளி
  • 12 முந்திரிப்பருப்பு
  • 1 பிரிஞ்சி இலை
  • 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய்
  • 1 டீஸ்பூன் கஷ்மீர் மிளகாய் தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1/2 டீஸ்பூன் சர்க்கரை
  • 1 டேபிள் ஸ்பூன் கஸுரி மேத்தி  இலைகள்
  • 1 டேபிள் ஸ்பூன் ஃப்ரெஷ் கிரீம்
  • உப்பு தேவையான அளவு
செய்முறை

1. தக்காளியை நன்றாக கழுவிக்கொள்ளவும். பின் கத்தியால் x வடிவில் லேசாக கீறிக் கொள்ளவும்.பின் தண்ணீர் விட்டு வேகவைத்து கொள்ளவும். பின் தோலுரித்துக்கொள்ளவும்.
2. ஒரு கிண்ணத்தில் முந்திரி பருப்பை இளஞ்சூடான தண்ணீரில் 1 மணி நேரம்ஊறவைக்கவும். பின் நைஸாக அரைக்கவும்.
3. இஞ்சி பூண்டு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். பின் வேகவைத்த தக்காளியை நைசாக அரைத்துக்கொள்ளவும்.
4. அகலமான கடாயில் வெண்ணெயை காயவைத்து பிரிஞ்சி இலை சேர்த்து வாசம் வந்த பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
5. பின் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும். மிதமான தீயில் வதக்கவும்.
6. அவை வதங்கியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள் தேவையான உப்பு சேர்த்து கலக்கவும். பின் முந்திரி விழுதை சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
7. பின் 1.5 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பித்ததும் கரம் மசாலா தூள் சேர்க்கவும்.
8. மசாலா சிறிது கெட்டியான பின் கஸுரி மேத்தி இலைகள் மற்றும் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
9. பின் நறுக்கிய பனீர் துண்டுகளை சேர்த்து மெதுவாக கிளறவும். பனீர் துண்டுகள் மசாலா வோடு கலந்த பின் ஃபெரஷ் கிரீம் சேர்த்து லேசான கொதி வந்ததும் இறக்கவும்.

Comments

Popular posts from this blog

திருநெல்வேலி கூட்டாஞ்சோறு - Tirunelveli Kootanchoru

கூட்டாஞ்சோறு - திருநெல்வேலியின் மிகவும் பிரபலமான மதிய உணவு. காய்கறிகள், பருப்பு, அரிசி மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்து ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான சோறு. இதற்கு நாட்டு வாழைக்காய், வெள்ளை கத்திரிக்காய், முருங்கைக்காய், கொத்தவரங்காய், மாங்காய் மற்றும் முருங்கைக்கீரை முக்கிய காய்கறிகளாகும். இந்த சோறு செய்து ஆறிய பின் இதில் இருக்கும் புளிப்பு மற்றும் காரம் சமமாக சேர்ந்து சுவையாக இருக்கும். இதற்கு கூழ் வத்தல் அல்லது அப்பளம் வைத்து பரிமாறவும் . தேவையான பொருட்கள் 2 கப் புழுங்கல் அரிசி 1/2 கப் துவரம்பருப்பு பெரிய எலுமிச்சை அளவு புளி 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள் 10 சின்ன வெங்காயம் 3 பச்சை மிளகாய் உப்பு தேவையான அளவு காய்கறிகள் 2 கேரட் 10 பீன்ஸ் 10 கொத்தவரங்காய் 2 முருங்கைக்காய் 7 கத்தரிக்காய் 1 வாழைக்காய் 1 உருளைக்கிழங்கு சிறிதளவு மாங்காய் துண்டுகள் 1 கப் முருங்கைக்கீரை இலைகள் அரைக்க 1 கப் தேங்காய் துருவல் 20 காய்ந்த மிளகாய் 15 சின்ன வெங்காயம் 10 பூண்டு பற்கள் 1 டேபிள்ஸ்பூன் சீரகம் தாளிக்க 1/2 கடுகு 1/2 டீஸ்பூன் உள...

திருநெல்வேலி இடி சாம்பார் - Tirunelveli Idi Sambar

தேவையான பொருட்கள் 1/4 கப் துவரம்பருப்பு சிறிய எலுமிச்சை அளவு புளி 15 சின்ன வெங்காயம் 2 பச்சை மிளகாய் 1 அல்லது 2 முருங்கைக்காய் 4 வெண்டைக்காய் 2 கத்திரிக்காய் 5 சிறிய துண்டு மாங்காய் 1/4 டீஸ்பூன் வெந்தயம் 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள் 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள் சிறிதளவு கறிவேப்பிலை சிறிதளவு கொத்தமல்லி இலை 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் உப்பு தேவையான அளவு இடி சாம்பார் பொடி செய்ய 7 காய்ந்த மிளகாய் 1 டேபிள் ஸ்பூன் துவரம்பருப்பு 1/2 டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு 1.5 டேபிள் ஸ்பூன் தனியா 1 டீஸ்பூன் சீரகம் 1/2 டீஸ்பூன் அரிசி 1/2 டீஸ்பூன் மிளகு 1 டீஸ்பூன் கருப்பு உளுந்து சிறிதளவு எண்ணெய் அரைக்க 3 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல் 4 சின்ன வெங்காயம் 3 பூண்டு பற்கள் 1/4 டீஸ்பூன் சீரகம் செய்முறை துவரம்பருப்பை கழுவி விட்டு 20 நிமிடங்கள் ஊறவைத்துக் கொள்ளவும். புளியை இளம் சூடான நீரில் ஊறவைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடலைப்பருப்பு மற்றும் துவரம்பருப்பு சேர்த்து வறுக்கவும். அவை நிறம் மாற ஆரம்பிக்கும் போது தனியா, சீரகம், அ...

வெஜிடபிள் புலவ் - Vegetable Pulav

வெஜிடபிள் புலவ் - குறைவான பொருட்கள் வைத்து சுலபமான வெஜிடபிள் புலவ். வீட்டில் நடத்தும் சிறிய பிறந்தநாள் பார்ட்டி அல்லது கெட் டு கெதர்(get together) போன்ற விசேஷங்களுக்கு இந்த புலவ் நன்றாக இருக்கும். இதற்கு எந்த வகையான மசாலா அல்லது குருமா வைத்து பரிமாறவும். தேவையானவை பொருட்கள் பாஸ்மதி அரிசி - 1/2 கப் தண்ணீர் - 1 கப் வெங்காயம் - 1, மெலிதாக நீளமாக நறுக்கியது பச்சை மிளகாய் - 2 கீறிக் கொள்ளவும் கேரட் - 1 நீளமாக நறுக்கவும் பீன்ஸ் - 4 நீளமாக நறுக்கவும் பச்சை பட்டாணி - 1/4 கப் பிரிஞ்சி இலை - 1 பட்டை - சிறிய துண்டு சீரகம் - 1/4 டீஸ்பூன் ஏலக்காய் - 2 கிராம்பு - 2 முந்திரிப்பருப்பு - 7 கொத்தமல்லி இலை - சிறிதளவு உப்பு - தேவையான அளவு நெய் - 1 டேபிள் ஸ்பூன் செய்முறை பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி தண்ணீரை முழுவதும் வடித்து கொள்ளவும். முந்திரிபருப்பை சிறிது நெய் விட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். ஒரு அகலமான கனமான கடாயில் நெய் விட்டு சூடானதும் பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் சீரகம் சேர்த்து நன்கு வாசனை வந்ததும் வெங்காயம் மற்றும் கீறிய பச்சை மிளகாய் ச...