Skip to main content

Posts

Showing posts with the label மாலை நேர சிற்றுண்டி

கார வடை - பட்டாணி பருப்பு போண்டா - Kara Vadai

எந்த ஒரு விசேஷம் அல்லது வீட்டில் நடக்கும் பார்ட்டிக்கு நாம் பெரும்பாலும் உளுந்த வடை அல்லது பஜ்ஜி செய்வதுண்டு. ஒரு மாறுதலுக்கு இந்த சுவையான பட்டாணி பருப்பு  கார போண்டா செய்து பாருங்கள். பட்டாணி பருப்பு கார போண்டா வெளியே முறுகலாகவும் உள்ளே மிருதுவாகவும் இருக்கும். இந்த போண்டா நேரமானாலும் அதன் சுவை மாறாது.  தேவையான பொருட்கள் 1.25 கப் பட்டாணி பருப்பு 1 கப் உளுத்தம்பருப்பு 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு 2 வெங்காயம், பொடியாக நறுக்கியது 2 பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது சிறிதளவு கொத்தமல்லி இலை சிறிதளவு புதினா சிறிதளவு கறிவேப்பிலை உப்பு தேவையான அளவு கடலை எண்ணெய் செய்முறை ஒரு அகலமான பாத்திரத்தில் பட்டாணி பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பை அளந்து எடுத்துக் கொள்ளவும். பின் 2 கப் தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊறவைக்கவும். பின் தண்ணீரில் 3 முறை நன்கு கழுவி விட்டு தண்ணீரை முழுவதும் வடித்து வைக்கவும். கிரைண்டரை நன்றாக தண்ணீரில் கழுவி விட்டு ஊறவைத்த பருப்பை சேர்த்து அரைக்கவும். சிறிது தண்ணீர் தெளித்து நன்கு பொங்க பொங்க அரைத்துக் கொள்ளவும். மாவு வெண்ணெய் போல் நன்கு மிருதுவாக...

வெஜிடபிள் கட்லெட் - மாலை நேர சிற்றுண்டி - Vegetable Cutlet

தேவையான பொருட்கள் 4 சிறிய உருளைக்கிழங்கு 1 கேரட் சிறிய துண்டு பீட்ரூட் 1/4 கப் பச்சை பட்டாணி 1 வெங்காயம் 2 பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது 1 டேபிள் டீஸ்பூன் இஞ்சி, பொடியாக நறுக்கியது 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள் 1/2 கப் மைதா மாவு 1/2 கப் பிரெட் தூள் அல்லது ரஸ்க் தூள் 3 பிரெட் ஸ்லைஸ் 1 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி இலை 300 மில்லி எண்ணெய் உப்பு தேவையான அளவு செய்முறை உருளைக்கிழங்கை தோல் சீவிக்கொள்ளவும். கேரட் மற்றும் பீட்ரூட்டை தோல் சீவி பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை பட்டாணியை உரித்து கொள்ளவும். ஒரு சிறிய குக்கரில் நறுக்கிய காய்கறிகளை சேர்த்து 1/2 கப் தண்ணீர் ஊற்றி 2 விசில் வரும் வரை வேகவைத்து கொள்ளவும். பின் வேகவைத்த காய்கறிகளை ஒரு அகலமான பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும். பின் நன்கு ஆறவைத்து கொள்ளவும். ஒரு டம்ளர் வைத்து நன்கு காய்கறிகளை மசித்து கொள்ளவும். ஒரு கனமான கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். அவை நன்கு வதங்கியதும் நறுக்...