தேவையான பொருட்கள் 4 சிறிய உருளைக்கிழங்கு 1 கேரட் சிறிய துண்டு பீட்ரூட் 1/4 கப் பச்சை பட்டாணி 1 வெங்காயம் 2 பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது 1 டேபிள் டீஸ்பூன் இஞ்சி, பொடியாக நறுக்கியது 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள் 1/2 கப் மைதா மாவு 1/2 கப் பிரெட் தூள் அல்லது ரஸ்க் தூள் 3 பிரெட் ஸ்லைஸ் 1 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி இலை 300 மில்லி எண்ணெய் உப்பு தேவையான அளவு செய்முறை உருளைக்கிழங்கை தோல் சீவிக்கொள்ளவும். கேரட் மற்றும் பீட்ரூட்டை தோல் சீவி பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை பட்டாணியை உரித்து கொள்ளவும். ஒரு சிறிய குக்கரில் நறுக்கிய காய்கறிகளை சேர்த்து 1/2 கப் தண்ணீர் ஊற்றி 2 விசில் வரும் வரை வேகவைத்து கொள்ளவும். பின் வேகவைத்த காய்கறிகளை ஒரு அகலமான பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும். பின் நன்கு ஆறவைத்து கொள்ளவும். ஒரு டம்ளர் வைத்து நன்கு காய்கறிகளை மசித்து கொள்ளவும். ஒரு கனமான கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். அவை நன்கு வதங்கியதும் நறுக்...