Skip to main content

Posts

Showing posts with the label ஆரோக்கிய உணவுகள்

உளுந்தம் பருப்பு சோறு - Black Urid Dal Rice (Ulundham Paruppu Sadham)

உளுந்தம்பருப்பு சோறு - கருப்பு உளுந்து, அரிசி, தேங்காய் துருவல் மற்றும் வெந்தயம் சேர்த்து ஒரு ஆரோக்கியமான சாதம். இந்த சாதத்தை எள்ளு துவையல் போட்டு பிசைந்து அவியல் வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.  தேவையான பொருட்கள் புழுங்கல் அரிசி - 1கப் கருப்பு உளுந்தம் பருப்பு - 1/4 கப் மற்றும் ஒரு கை வெந்தயம் - 1 டீஸ்பூன் பூண்டு பற்கள் - 10 தேங்காய்த்துருவல் - 1/2 கப் தண்ணீர் - 3 கப் நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை வாணலியை அடுப்பில் வைத்து லேசாக சூடாக்கி அதில் வெந்தயத்தை சேர்த்து வறுக்கவும். வெந்தயம் லேசாக வெடிக்க ஆரம்பித்ததும் கருப்பு உளுந்தம் பருப்பை சேர்த்து நன்கு  வாசனை வரும் வரை வறுக்கவும்.  ஒரு அகலமான பாத்திரத்தில் அரிசியோடு வறுத்த பருப்பையும் சேர்த்து நன்கு கழுவி விட்டு 1 கப் தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும். ஒரு பிரஷர் குக்கரில் ஊறவைத்த அரிசி, மேலும் 2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும். பின் அதில் தேவையான அளவு உப்பு, தேங்காய் துருவல் மற்றும் நல்லெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். குக்கரை மூடி வைத்து 3 வி...

பீட்ரூட் தேங்காய்பால் ஜுஸ் - Beetroot Coconut Milk Juice

குழந்தைகளுக்கு செயற்கை கலர்  சேர்க்காமல் வீட்டிலேயே செய்திடலாம் ஆரோக்கியமான ரோஸ் மில்க். தேங்காயிலும், பீட்ரூட்டிலும் இருக்கும் சத்துக்கள் ஏராளம். வாரத்திற்கு ஒரு முறை இந்த ஜுஸ் எடுத்துக்கொண்டால் உடலிலுள்ள கழிவுகள் நீங்கும். தேவையான பொருட்கள் தேங்காய் - 1 மூடி பீட்ரூட் - சிறிய துண்டு அல்லது கால் கப் துருவிய பீட்ரூட் ஏலக்காய் - 3 செய்முறை தேங்காயை பிரவுன் நிறம் இல்லாமல் துருவிக் கொள்ளவும். பீட்ரூட்டை தோல் சீவி துருவிக் கொள்ளவும். ஒரு பெரிய மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், பீட்ரூட் துருவல் மற்றும் ஏலக்காய் சேர்த்து கால் கப் தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும். பின் அரிப்பில் வடிகட்டி பிழிந்து கொள்ளவும். மீண்டும் ஒரு முறை பிழிந்த தேங்காய் பீட்ரூட் விழுதை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை அரிப்பில் வடிகட்டி நன்கு பிழிந்து வடிகட்டிக் கொள்ளவும். நன்கு கலந்து பரிமாறவும்.

கொள்ளு தோசை - Kollu Dosa

காலை உணவிற்கு இட்லி மற்றும் தோசை தானா என்று கேட்பவர்களுக்கு இந்த ஆரோக்கியமான கொள்ளு தோசையை செய்து கொடுங்கள். மீண்டும் மீண்டும் வேண்டும் என்று  கேட்பார்கள். கொள்ளு பருப்பில் ஏராளமான நன்மைகள் உள்ளன. ஆனாலும் இதை அடிக்கடி உண்ணக்கூடாது.  மாதத்திற்கு இரண்டுமுறை சேர்த்தால் போதுமானது. தேவையான பொருட்கள்     இட்லி அரிசி - 1 கப்     பச்சரிசி - 1/2 கப்     கொள்ளு - 1.5 கப்     கல் உப்பு - தேவையான அளவு     நல்லெண்ணெய் - தேவையான அளவு செய்முறை  ஒரு பாத்திரத்தில் இட்லி அரிசி, பச்சரிசி மற்றும் கொள்ளுபருப்பு சேர்த்து தண்ணீரில் மூன்று முறை நன்கு கழுவிக்கொள்ளவும். பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 5 மணி நேரம் ஊறவைக்கவும்.  பின் மீண்டும் ஒரு முறை தண்ணீரில் கழுவிக் கொள்ளவும். கிரைண்டரில் ஊறவைத்தவற்றை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து அரைக்கவும்.  கிரைண்டரில் அரைக்கும் போது ஓரத்தில் இருக்கும் அரிசி, பருப்பை ஒதுக்கி விட்டு தண்ணீரை தெளித்து பொங்க பொங்க நன்கு அரைத்துக் கொள்ளவும். சுமார் 30 ந...

கேரட் சூப் - Carrot Soup

நமது சமையலில் அன்றாடம் பயன்படுத்தும் கேரட் மற்றும் தக்காளியை வைத்து சுவையான சூப் செய்திடலாம். சூப் கெட்டியாக சேர்க்கும் சோளமாவு அல்லது மைதாமாவு இதற்கு தேவையில்லை. காய்கறி சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு இதை வாரம் இருமுறை செய்து கொடுங்கள்.  தேவையான பொருட்கள் கேரட் - 3 தக்காளி - 3 மிளகு - 1 டேபிள்ஸ்பூன் வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை கேரட்டை நன்றாக கழுவி விட்டு தோலை சீவி, பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் ‌. தக்காளியை நன்கு கழுவி நறுக்கிக் கொள்ளவும்.  ஒரு சிறிய பிரஷர் குக்கரில் நறுக்கிய கேரட், தக்காளி, மிளகு மற்றும் காய்கறிகள் முழ்கும் வரை தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும். பின் 2 விசில் வரும் வரை வேகவைத்துக் கொள்ளவும். பின் குக்கரை திறந்து வேகவைத்த காய்கறிகளை நன்கு ஆறவைத்துக் கொள்ளவும். ஒரு பெரிய மிக்ஸி ஜாரில் வேகவைத்த காய்கறிகளை நன்கு அரைத்துக் கொள்ளவும். பின் ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும். அதோடு மேலும் 2 கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும்.  ச...

தேங்காய்ப்பால் கறிவேப்பிலை ஜுஸ் - Coconut Milk Curry leaves Juice

தேங்காய்ப்பாலில் இருக்கும் பல்வேறு மருத்துவ குணங்களை நாம் மறந்து விட்டு நாம் பல்வேறு டின்களில் இருக்கும் ஜூஸை அருந்துகிறோம். இந்த தேங்காய்ப்பால் கறிவேப்பிலை ஜுஸ் காலை உணவாக உட்கொள்ளும் போது அந்த நாள் முழுவதும் நாம் சுறுசுறுப்பாக இருக்க முடியும். குறிப்பாக யோகா செய்வதற்கு இரண்டு மணி நேரம் முன்பு இந்த கறிவேப்பிலை தேங்காய்ப்பால்  ஜுஸ்  அருந்தினால், உடற்பயிற்சிகள் செய்வதற்கு இலகுவாக இருக்கும்.  தேவையான பொருட்கள் தேங்காய் - 1 மூடி கறிவேப்பிலை - 20 இலைகள் ஊறவைத்த  பாதாம் பருப்பு - 5 செய்முறை தேங்காயைத் துருவிக் கொள்ளவும். ஒரு பெரிய மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், கறிவேப்பிலை, ஊறவைத்த பாதாம் பருப்பு மற்றும் 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு அரைக்கவும். பின் ஒரு வெள்ளைத் துணியில் அல்லது பெரிய அரிப்பில் வைத்து வடிகட்டிக் கொள்ளவும். அரைத்த தேங்காய் கறிவேப்பிலை பாதாம் விழுதை மீண்டும் சிறிது தண்ணீர் விட்டு நன்கு அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். நன்கு கலந்து பரிமாறவும். குறிப்பு இதில் கறிவேப்பிலைக்கு பதிலாக கொத்தமல்லி இலை அல்லது புதினா இலைகள் வைத்து...