Skip to main content

Posts

Showing posts with the label மசாலா வகைகள்

பனீர் பட்டர் மசாலா - Paneer Butter Masala

வீட்டிலேயே சுவையான ஹோட்டல் ஸ்டைல் பனீர் பட்டர் மசாலா. இதற்கு நன்கு பழுத்த தக்காளி பழம் வைத்து செய்தால் நன்றாக இருக்கும். முந்திரிப் பருப்பை 1 மணி நேரம் நன்கு ஊறவைத்து அரைத்து சேர்த்தால் கிரேவி நன்கு கெட்டியாக இருக்கும்.  தேவையான பொருட்கள் 250 கிராம் பனீர் 6 பூண்டு 1 டீஸ்பூன் இஞ்சி 6 நன்கு பழுத்த தக்காளி 12 முந்திரிப்பருப்பு 1 பிரிஞ்சி இலை 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் 1 டீஸ்பூன் கஷ்மீர் மிளகாய் தூள் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள் 1/2 டீஸ்பூன் சர்க்கரை 1 டேபிள் ஸ்பூன் கஸுரி மேத்தி  இலைகள் 1 டேபிள் ஸ்பூன் ஃப்ரெஷ் கிரீம் உப்பு தேவையான அளவு செய்முறை 1. தக்காளியை நன்றாக கழுவிக்கொள்ளவும். பின் கத்தியால் x வடிவில் லேசாக கீறிக் கொள்ளவும்.பின் தண்ணீர் விட்டு வேகவைத்து கொள்ளவும். பின் தோலுரித்துக்கொள்ளவும். 2. ஒரு கிண்ணத்தில் முந்திரி பருப்பை இளஞ்சூடான தண்ணீரில் 1 மணி நேரம்ஊறவைக்கவும். பின் நைஸாக அரைக்கவும். 3. இஞ்சி பூண்டு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். பின் வேகவைத்த தக்காளியை நைசாக அரைத்துக்கொள்ளவும். 4. ...

ப்ரோக்கோலி மசாலா - Broccoli Masala

ப்ரோக்கோலியை வைத்து சுவையான ஹோட்டல் ஸ்டைல் மசாலா. ப்ரோக்கோலியை அரைவேக்காடு வேகவைத்து அல்லது பச்சையாக சாப்பிட்டால் அதன் சத்துக்கள் முழுவதும் கிடைக்கும். இதில் ப்ரோக்கோலிக்கு பதில் காளான் வைத்து செய்யலாம். தேவையான பொருட்கள் 1 சிறிய ப்ரோக்கோலி 1 வெங்காயம் 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது 1/4 டீஸ்பூன் சீரகம் 3/4 டீஸ்பூன் மிளகாய்த்தூள் 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள் 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள் 1 டீஸ்பூன் சர்க்கரை 2 டேபிள் ஸ்பூன் ஃபரஷ் கிரீம் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் உப்பு அரைக்க 2 வெங்காயம் 2 தக்காளி 10 பாதாம் செய்முறை 1. ஒரு சிறிய குக்கரில் 2 வெங்காயம், 2 தக்காளி, பாதாம் சேர்க்கவும். 1 கப் தண்ணீர் விட்டு 1 விசில் வந்ததும் இறக்கவும். 2.  பெரிய பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பின் அதில் ப்ரோக்கோலி பூக்களை போட்டு மூடி வைக்கவும். பின் அதில் ஐஸ் கட்டிகள் போட்டு குளிர விடவும். 5 நிமிடங்கள் கழித்து தண்ணீரை வடிகட்டவும். 3. வேகவைத்த வெங்காயம், தக்காளி, பாதாம் பருப்பு சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். 4. கடாயில் எண்ணெய் விட்டு சூட...

பட்டாணி மசாலா - Green peas masala

https://virundhombaltamil.blogspot.com/2019/05/green-peas-masala.html பச்சை பட்டாணி மசாலா மிகவும் எளிதானது. 30 நிமிடங்களில் சுவையான மசாலா செய்ய வேண்டுமா இதை செய்து பாருங்கள். இதற்கு காய்ந்த பச்சை பட்டாணி மற்றும் நன்கு பழுத்த தக்காளி வைத்து செய்தால் மசாலா மிகவும் சுவையாக இருக்கும். தேவையான பொருட்கள் 1/2 கப் காய்ந்த பச்சை பட்டாணி 2 வெங்காயம் 3 தக்காளி 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள் 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன் மல்லித்தூள் 2 டீஸ்பூன் கரம் மசாலா தூள் 1 டீஸ்பூன் சர்க்கரை 1 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி இலை 1/2 டீஸ்பூன் நெய் 1/2 டீஸ்பூன் சோம்பு 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் உப்பு தேவையான அளவு செய்முறை காய்ந்த பச்சை பட்டாணியை 2 முறை கழுவி பின் 1 கப் தண்ணீரில் 4 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும். பின் குக்கரில் 4 முதல் 6 விசில் வேகவைத்துக் கொள்ளவும். வெங்காயத்தையும், தக்காளியையும் தனித் தனியாக அரைத்துக் கொள்ளவும். ஒரு அகலமான வாணலியில் எண்ணெய் விட்டு சோம்பு போட்டு பொரிந்ததும் வெங்காய விழுதை போட்டு வதக்கவும். அவை நன்கு சுருண்டு வதங்கியதும் தக்காளி விழுதை போட்டு வதக்கவும். இர...