https://virundhombaltamil.blogspot.com/2019/05/green-peas-masala.htmlபச்சை பட்டாணி மசாலா மிகவும் எளிதானது. 30 நிமிடங்களில் சுவையான மசாலா செய்ய வேண்டுமா இதை செய்து பாருங்கள். இதற்கு காய்ந்த பச்சை பட்டாணி மற்றும் நன்கு பழுத்த தக்காளி வைத்து செய்தால் மசாலா மிகவும் சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள்
- 1/2 கப் காய்ந்த பச்சை பட்டாணி
- 2 வெங்காயம்
- 3 தக்காளி
- 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள்
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1 டீஸ்பூன் மல்லித்தூள்
- 2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
- 1 டீஸ்பூன் சர்க்கரை
- 1 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி இலை
- 1/2 டீஸ்பூன் நெய்
- 1/2 டீஸ்பூன் சோம்பு
- 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- காய்ந்த பச்சை பட்டாணியை 2 முறை கழுவி பின் 1 கப் தண்ணீரில் 4 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.
- பின் குக்கரில் 4 முதல் 6 விசில் வேகவைத்துக் கொள்ளவும்.
- வெங்காயத்தையும், தக்காளியையும் தனித் தனியாக அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு அகலமான வாணலியில் எண்ணெய் விட்டு சோம்பு போட்டு பொரிந்ததும் வெங்காய விழுதை போட்டு வதக்கவும்.
- அவை நன்கு சுருண்டு வதங்கியதும் தக்காளி விழுதை போட்டு வதக்கவும்.
- இரண்டு கலவையும் ஒன்று சேர்ந்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
- பின் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் போட்டு 1 நிமிடம் வதக்கி பின் தேவையான உப்பு சேர்த்து கலக்கவும்.
- பின் வேகவைத்த பட்டாணியை சேர்த்து கொள்ளவும்.
- பின் 1/2 கப் தண்ணீர், கரம் மசாலா தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
- மசாலா கெட்டியான பின் சிறிதளவு சர்க்கரை, கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
Comments
Post a Comment