சப்பாத்திக்கு பத்தே நிமிடத்தில் சுவையான சப்ஜி. இந்த சப்ஜியில் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து செய்யப்படும். சிறிதளவு தக்காளியை அரைத்து சேர்த்தால் தொக்கு போல் கெட்டியாக இருக்கும்.
செய்முறை
தேவையான பொருட்கள்
- 2 வெங்காயம்
- 4 நன்கு பழுத்த தக்காளி
- 2 பச்சை மிளகாய்
- 1/2 டீஸ்பூன் கடுகு
- 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
- சிறிது கறிவேப்பிலை
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1/2 டீஸ்பூன் தனியா தூள்
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
- உப்பு தேவையான அளவு
1. வெங்காயம் மற்றும் 2 தக்காளியை மெலிதாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும். 2 தக்காளியை அரைத்துக் கொள்ளவும்.
2. வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து பின் நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும். அவை வதங்கியதும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
3. பின் நறுக்கிய தக்காளி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். தக்காளி லேசாக நிறம் மாறிய பின் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும்.
4. அவை வதங்கியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து கலக்கவும்.
5. பின் 1 கப் தண்ணீர் விட்டு 10 நிமிடங்கள் எண்ணெய் பிரியும் வரை கொதிக்க வைத்து இறக்கவும்
Comments
Post a Comment