Skip to main content

உளுந்தம் பருப்பு சோறு - Black Urid Dal Rice (Ulundham Paruppu Sadham)

உளுந்தம்பருப்பு சோறு - கருப்பு உளுந்து, அரிசி, தேங்காய் துருவல் மற்றும் வெந்தயம் சேர்த்து ஒரு ஆரோக்கியமான சாதம். இந்த சாதத்தை எள்ளு துவையல் போட்டு பிசைந்து அவியல் வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். 


தேவையான பொருட்கள்

புழுங்கல் அரிசி - 1கப்
கருப்பு உளுந்தம் பருப்பு - 1/4 கப் மற்றும் ஒரு கை
வெந்தயம் - 1 டீஸ்பூன்
பூண்டு பற்கள் - 10
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
தண்ணீர் - 3 கப்
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை


  1. வாணலியை அடுப்பில் வைத்து லேசாக சூடாக்கி அதில் வெந்தயத்தை சேர்த்து வறுக்கவும். வெந்தயம் லேசாக வெடிக்க ஆரம்பித்ததும் கருப்பு உளுந்தம் பருப்பை சேர்த்து நன்கு  வாசனை வரும் வரை வறுக்கவும். 
  2. ஒரு அகலமான பாத்திரத்தில் அரிசியோடு வறுத்த பருப்பையும் சேர்த்து நன்கு கழுவி விட்டு 1 கப் தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும்.
  3. ஒரு பிரஷர் குக்கரில் ஊறவைத்த அரிசி, மேலும் 2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும்.
  4. பின் அதில் தேவையான அளவு உப்பு, தேங்காய் துருவல் மற்றும் நல்லெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  5. குக்கரை மூடி வைத்து 3 விசில் வரும் வரை வேக வைத்து 5 நிமிடம் குறைந்த சூட்டில் வைத்து அடுப்பை அணைத்து விடவும்.
  6. குக்கரில் இருக்கும் ஆவி தானாக அடங்கியதும் குக்கரை திறந்து மெதுவாக கலந்து பரிமாறும் பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும்.


உளுந்தம்பருப்பு சோறு செய்முறையை படிப்படியாக பட விளக்கத்தோடு காண கீழே இருக்கும் லிங்க் மேலே கிளிக் செய்யவும்.

உளுந்தம்பருப்பு சோறு பட விளக்கம்.

Comments