வெஜிடபிள் புலவ் - குறைவான பொருட்கள் வைத்து சுலபமான வெஜிடபிள் புலவ். வீட்டில் நடத்தும் சிறிய பிறந்தநாள் பார்ட்டி அல்லது கெட் டு கெதர்(get together) போன்ற விசேஷங்களுக்கு இந்த புலவ் நன்றாக இருக்கும். இதற்கு எந்த வகையான மசாலா அல்லது குருமா வைத்து பரிமாறவும்.
தேவையானவை பொருட்கள்
- பாஸ்மதி அரிசி - 1/2 கப்
- தண்ணீர் - 1 கப்
- வெங்காயம் - 1, மெலிதாக நீளமாக நறுக்கியது
- பச்சை மிளகாய் - 2 கீறிக் கொள்ளவும்
- கேரட் - 1 நீளமாக நறுக்கவும்
- பீன்ஸ் - 4 நீளமாக நறுக்கவும்
- பச்சை பட்டாணி - 1/4 கப்
- பிரிஞ்சி இலை - 1
- பட்டை - சிறிய துண்டு
- சீரகம் - 1/4 டீஸ்பூன்
- ஏலக்காய் - 2
- கிராம்பு - 2
- முந்திரிப்பருப்பு - 7
- கொத்தமல்லி இலை - சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு
- நெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
- பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி தண்ணீரை முழுவதும் வடித்து கொள்ளவும். முந்திரிபருப்பை சிறிது நெய் விட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
- ஒரு அகலமான கனமான கடாயில் நெய் விட்டு சூடானதும் பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் சீரகம் சேர்த்து நன்கு வாசனை வந்ததும் வெங்காயம் மற்றும் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி சேர்த்து சிறிது நேரம் லேசாக வதக்கவும்.
- பின் அதை ஒரு சிறிய குக்கரில் மாற்றிக் கொள்ளவும். அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- பின் அரிசியை சேர்த்து நன்கு கலந்து குறைந்த சூட்டில் வைத்து மூடி வைத்து வேகவிடவும். 2 விசில் வந்ததும் இறக்கவும். குக்கரில் இருக்கும் ஆவி தானாக அடங்கியதும் குக்கரை திறந்து லேசாக கிளறி பரிமாறும் பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும். அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் வறுத்த முந்திரி சேர்த்து கிளறி பரிமாறவும்.
வெஜிடபிள் புலவ் செய்முறையை படிப்படியாக பட விளக்கத்தோடு காண கீழே இருக்கும் லிங்க் மேலே கிளிக் செய்யவும்.
வெஜிடபிள் புலவ் பட விளக்கம்
Comments
Post a Comment