Skip to main content

காரக்குழம்பு - Karakuzhambu



இந்த காரக்குழம்பை ஒரு நாள் மதிய உணவாக ஹோட்டலில் சாப்பிடும் போது சுவைத்தேன். மிகவும் அருமையாக இருந்தது. பின் வீட்டில் வந்து செய்து பார்த்தேன். 

இந்த காரக்குழம்புக்கு மசாலா பொருட்கள் வறுக்கும் போது பதமாக வாசனை வரும் வரை வறுக்கவும். அதேபோல் குறிப்பிட்டள்ள அளவுக்கு மேல் பொருட்கள் சேர்க்க வேண்டாம். ஏனென்றால் குழம்பு கெட்டியாகிவிடும். இந்த குழம்பு தண்ணியாகவும் இருக்கக்கூடாது கெட்டியாகவும் இருக்கக்கூடாது. இதில் சுண்டைக்காய் வற்றலுக்கு பதிலாக கத்திரிக்காய் அல்லது மணத்தக்காளி வற்றல் வைத்து செய்யலாம். 




தேவையான பொருட்கள்
  • 10 சின்ன வெங்காயம்
  • 7 பூண்டு பற்கள்
  • 1 தக்காளி
  • 2 டேபிள் ஸ்பூன் சுண்டைக்காய் வற்றல்
  • 2 காய்ந்த மிளகாய்
  • 2 டீஸ்பூன் சாம்பார் பொடி
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  • சிறிது கறிவேப்பிலை
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  • 1/4 டீஸ்பூன் வெந்தயம்
  • 7 டேபிள் ஸ்பூன் கடலை எண்ணெய்
  • உப்பு தேவையான அளவு
அரைக்க
  • 1 டேபிள் கடலைப்பருப்பு
  • 1 டேபிள் ஸ்பூன் தனியா
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1/4 கப் தேங்காய் துருவல்
  • 6 சின்ன வெங்காயம்
  • 1 தக்காளி
  • 6 காய்ந்த மிளகாய்
செய்முறை
  1. புளியை கொதிக்கும் நீரில் போட்டு 20 நிமிடங்கள் ஊறவைத்துக் கொள்ளவும். பின் 1.5 கப் தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும்.
  2. வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் கடலைப்பருப்பு மற்றும் தனியா சேர்த்து லேசாக வறுக்கவும். பின் சீரகம், சோம்பு சேர்த்து வாசம் வரும் வரை வறுத்து கொள்ளவும்.
  3. பின் மிளகாய் வற்றல் சேர்த்து லேசாக நிறம் மாறியதும் சின்ன வெங்காயம், தக்காளி மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறி அவை நிறம் மாறியதும் அடுப்பை அணைத்து விடவும். வறுத்த பொருட்கள் அதன் சூட்டிலேயே இருந்து ஆறவிடவும். பின் சிறிய மிக்ஸி ஜாரில் சிறிது தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  4. வாணலியில் கடலை எண்ணெய் விட்டு சூடானதும் வெந்தயம் சேர்த்து பொரிந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து பின் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  5. பின் நறுக்கிய தக்காளி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
  6. பின் சாம்பார் பொடி சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ளவும்.
  7. இப்போது மெதுவாக புளிக்கரைசலை சேர்க்கவும்.
  8. புளிக்கரைசலை நன்கு கலந்து விடவும். பின் தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  9. பின் அரைத்த விழுதை சேர்த்து மேலும் தண்ணீர் விட்டு நன்கு கலந்து கொதிக்க விடவும்.
  10. வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் விட்டு சூடானதும் மிளகாய் வற்றல் மற்றும் சுண்டைக்காய் வற்றல் சேர்த்து நன்கு வறுத்து கொதிக்கும் குழம்பில் சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து அடுப்பை அணைத்து விடவும். 3 மணி நேரத்திற்கு பின் சூடான சாதத்துடன் பரிமாறவும்.
படிப்படியாக பட விளக்கத்தோடு காரக்குழம்பு செய்முறையை காண கீழே இருக்கும் லிங்க் மேலே கிளிக் செய்யவும்.

Karakuzhambu recipe with step by step photos 

Comments

Popular posts from this blog

திருநெல்வேலி கூட்டாஞ்சோறு - Tirunelveli Kootanchoru

கூட்டாஞ்சோறு - திருநெல்வேலியின் மிகவும் பிரபலமான மதிய உணவு. காய்கறிகள், பருப்பு, அரிசி மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்து ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான சோறு. இதற்கு நாட்டு வாழைக்காய், வெள்ளை கத்திரிக்காய், முருங்கைக்காய், கொத்தவரங்காய், மாங்காய் மற்றும் முருங்கைக்கீரை முக்கிய காய்கறிகளாகும். இந்த சோறு செய்து ஆறிய பின் இதில் இருக்கும் புளிப்பு மற்றும் காரம் சமமாக சேர்ந்து சுவையாக இருக்கும். இதற்கு கூழ் வத்தல் அல்லது அப்பளம் வைத்து பரிமாறவும் . தேவையான பொருட்கள் 2 கப் புழுங்கல் அரிசி 1/2 கப் துவரம்பருப்பு பெரிய எலுமிச்சை அளவு புளி 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள் 10 சின்ன வெங்காயம் 3 பச்சை மிளகாய் உப்பு தேவையான அளவு காய்கறிகள் 2 கேரட் 10 பீன்ஸ் 10 கொத்தவரங்காய் 2 முருங்கைக்காய் 7 கத்தரிக்காய் 1 வாழைக்காய் 1 உருளைக்கிழங்கு சிறிதளவு மாங்காய் துண்டுகள் 1 கப் முருங்கைக்கீரை இலைகள் அரைக்க 1 கப் தேங்காய் துருவல் 20 காய்ந்த மிளகாய் 15 சின்ன வெங்காயம் 10 பூண்டு பற்கள் 1 டேபிள்ஸ்பூன் சீரகம் தாளிக்க 1/2 கடுகு 1/2 டீஸ்பூன் உள

உளுந்தம் பருப்பு சோறு - Black Urid Dal Rice (Ulundham Paruppu Sadham)

உளுந்தம்பருப்பு சோறு - கருப்பு உளுந்து, அரிசி, தேங்காய் துருவல் மற்றும் வெந்தயம் சேர்த்து ஒரு ஆரோக்கியமான சாதம். இந்த சாதத்தை எள்ளு துவையல் போட்டு பிசைந்து அவியல் வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.  தேவையான பொருட்கள் புழுங்கல் அரிசி - 1கப் கருப்பு உளுந்தம் பருப்பு - 1/4 கப் மற்றும் ஒரு கை வெந்தயம் - 1 டீஸ்பூன் பூண்டு பற்கள் - 10 தேங்காய்த்துருவல் - 1/2 கப் தண்ணீர் - 3 கப் நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை வாணலியை அடுப்பில் வைத்து லேசாக சூடாக்கி அதில் வெந்தயத்தை சேர்த்து வறுக்கவும். வெந்தயம் லேசாக வெடிக்க ஆரம்பித்ததும் கருப்பு உளுந்தம் பருப்பை சேர்த்து நன்கு  வாசனை வரும் வரை வறுக்கவும்.  ஒரு அகலமான பாத்திரத்தில் அரிசியோடு வறுத்த பருப்பையும் சேர்த்து நன்கு கழுவி விட்டு 1 கப் தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும். ஒரு பிரஷர் குக்கரில் ஊறவைத்த அரிசி, மேலும் 2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும். பின் அதில் தேவையான அளவு உப்பு, தேங்காய் துருவல் மற்றும் நல்லெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். குக்கரை மூடி வைத்து 3 விசில் வரும் வரை

குடமிளகாய் உருளைக்கிழங்கு மசாலா - Capsicum Potato Masala

குடமிளகாய் மற்றும் உருளைக்கிழங்கை வைத்து ஒரு திடீர் சைட் டிஷ். எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம் அல்லது சப்பாத்தி, பூரிக்கு பரிமாறலாம். குடமிளகாயை அதிக நேரம் எண்ணெயில் வதக்கினால் அதன் நிறமும் சுவையும் மாறிவிடும். இதில் சாம்பார் பொடிக்கு பதிலாக சிறிது மிளகாய்த்தூள் அல்லது மிளகுத்தூள் சேர்த்து செய்யலாம். தேவையான பொருட்கள் 1 பச்சை குடைமிளகாய் 1 உருளைக்கிழங்கு 1/4 டீஸ்பூன் சீரகம் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் சாம்பார் பொடி 1 டேபிள் ஸ்பூன் புளிக்கரைசல் 1 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி இலை 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் உப்பு தேவையான அளவு செய்முறை குடைமிளகாய் மற்றும் உருளைக் கிழங்கை நீளமாக நறுக்கி கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம் சேர்த்து பொரிந்ததும் நறுக்கிய கிழங்கை சேர்த்து வதக்கவும். அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். உருளைக்கிழங்கு நன்கு வதங்கியதும் நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து வதக்கவும். தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.  குடைமிளகாய் லேசாக வதங்கியதும் புளிக்கரைசல் மற்றும் சாம்பார்  பொடி சேர்த்து 2 நிமிடங்கள் கெட்டியானதும் கொத்த