Skip to main content

வெந்தய மிளகாய் - Green Chilly Pickle

பச்சை மிளகாயிலுள்ள கேப்சிக்கோ என்ற வேதிப்பொருள் பல்வேறு மருத்துவ குணங்களுடைய வெந்தயத்தோடு சேர்ந்து நாவிற்கு சுவையான சைட் டிஷை அளிப்பதோடு நமது உடலுக்குத் தேவையான பல நன்மைகளைத் தருகிறது. மேலும் எண்ணெயில் பச்சைமிளகாயை வதக்குவதால் காரம் குறைவாக இருக்கும். 


தேவையான பொருட்கள்
  • பச்சை மிளகாய் - 25
  • வெந்தயம் - 2 டீஸ்பூன்
  • கட்டிப் பெருங்காயம் ‌‌ - சிறிய துண்டு
  • நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
செய்முறை

  1. பச்சை மிளகாயை நன்கு கழுவிக் கொள்ளவும். பின் ஒரு வெள்ளை துணியால் ஈரம் இல்லாமல் துடைத்துக் கொள்ளவும்.
  2. பின் நடுவில் கீறிக் கொள்ளவும்.
  3. ஒரு வாணலியில் வெந்தயத்தை போட்டு வாசம் வரும் வரை வறுத்துக்  கொள்ளவும். பின் ஒரு தட்டில் மாற்றவும். அதே வாணலியில் ஒரு துளி எண்ணெய் விட்டு கட்டி பெருங்காயத்தை போட்டு பொரிந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
  4. பின் ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் வறுத்த வெந்தயம், வறுத்த காயம் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பொடித்துக் கொள்ளவும்.
  5. இப்போது ஒரு சிறிய ஸ்பூன் வைத்து சிறிதளவு பொடித்த பொடியை ஒவ்வொரு பச்சை மிளகாயின் நடுவில் வைத்து 2 பக்களிலும் தடவவும்.
  6. ஒரு இரும்பு  கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் கலந்து வைத்துள்ள பச்சை மிளகாய்களை சேர்த்து சிறு தீயில் வைத்து லேசாக நிறம் மாறும் வரை வதக்கவும். பின் பீங்கான்  பவுலில் மாற்றிக் கொள்ளவும்.
குறிப்பு
இட்லி, தோசைக்கு பரிமாறும் போது வெந்தய மிளகாயின் மேல் சிறிது நல்லெண்ணெய் விட்டு கலந்துக் கொள்ளவும்.

Comments

Popular posts from this blog

திருநெல்வேலி கூட்டாஞ்சோறு - Tirunelveli Kootanchoru

கூட்டாஞ்சோறு - திருநெல்வேலியின் மிகவும் பிரபலமான மதிய உணவு. காய்கறிகள், பருப்பு, அரிசி மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்து ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான சோறு. இதற்கு நாட்டு வாழைக்காய், வெள்ளை கத்திரிக்காய், முருங்கைக்காய், கொத்தவரங்காய், மாங்காய் மற்றும் முருங்கைக்கீரை முக்கிய காய்கறிகளாகும். இந்த சோறு செய்து ஆறிய பின் இதில் இருக்கும் புளிப்பு மற்றும் காரம் சமமாக சேர்ந்து சுவையாக இருக்கும். இதற்கு கூழ் வத்தல் அல்லது அப்பளம் வைத்து பரிமாறவும் . தேவையான பொருட்கள் 2 கப் புழுங்கல் அரிசி 1/2 கப் துவரம்பருப்பு பெரிய எலுமிச்சை அளவு புளி 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள் 10 சின்ன வெங்காயம் 3 பச்சை மிளகாய் உப்பு தேவையான அளவு காய்கறிகள் 2 கேரட் 10 பீன்ஸ் 10 கொத்தவரங்காய் 2 முருங்கைக்காய் 7 கத்தரிக்காய் 1 வாழைக்காய் 1 உருளைக்கிழங்கு சிறிதளவு மாங்காய் துண்டுகள் 1 கப் முருங்கைக்கீரை இலைகள் அரைக்க 1 கப் தேங்காய் துருவல் 20 காய்ந்த மிளகாய் 15 சின்ன வெங்காயம் 10 பூண்டு பற்கள் 1 டேபிள்ஸ்பூன் சீரகம் தாளிக்க 1/2 கடுகு 1/2 டீஸ்பூன் உள...

திருநெல்வேலி இடி சாம்பார் - Tirunelveli Idi Sambar

தேவையான பொருட்கள் 1/4 கப் துவரம்பருப்பு சிறிய எலுமிச்சை அளவு புளி 15 சின்ன வெங்காயம் 2 பச்சை மிளகாய் 1 அல்லது 2 முருங்கைக்காய் 4 வெண்டைக்காய் 2 கத்திரிக்காய் 5 சிறிய துண்டு மாங்காய் 1/4 டீஸ்பூன் வெந்தயம் 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள் 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள் சிறிதளவு கறிவேப்பிலை சிறிதளவு கொத்தமல்லி இலை 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் உப்பு தேவையான அளவு இடி சாம்பார் பொடி செய்ய 7 காய்ந்த மிளகாய் 1 டேபிள் ஸ்பூன் துவரம்பருப்பு 1/2 டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு 1.5 டேபிள் ஸ்பூன் தனியா 1 டீஸ்பூன் சீரகம் 1/2 டீஸ்பூன் அரிசி 1/2 டீஸ்பூன் மிளகு 1 டீஸ்பூன் கருப்பு உளுந்து சிறிதளவு எண்ணெய் அரைக்க 3 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல் 4 சின்ன வெங்காயம் 3 பூண்டு பற்கள் 1/4 டீஸ்பூன் சீரகம் செய்முறை துவரம்பருப்பை கழுவி விட்டு 20 நிமிடங்கள் ஊறவைத்துக் கொள்ளவும். புளியை இளம் சூடான நீரில் ஊறவைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடலைப்பருப்பு மற்றும் துவரம்பருப்பு சேர்த்து வறுக்கவும். அவை நிறம் மாற ஆரம்பிக்கும் போது தனியா, சீரகம், அ...

வெஜிடபிள் புலவ் - Vegetable Pulav

வெஜிடபிள் புலவ் - குறைவான பொருட்கள் வைத்து சுலபமான வெஜிடபிள் புலவ். வீட்டில் நடத்தும் சிறிய பிறந்தநாள் பார்ட்டி அல்லது கெட் டு கெதர்(get together) போன்ற விசேஷங்களுக்கு இந்த புலவ் நன்றாக இருக்கும். இதற்கு எந்த வகையான மசாலா அல்லது குருமா வைத்து பரிமாறவும். தேவையானவை பொருட்கள் பாஸ்மதி அரிசி - 1/2 கப் தண்ணீர் - 1 கப் வெங்காயம் - 1, மெலிதாக நீளமாக நறுக்கியது பச்சை மிளகாய் - 2 கீறிக் கொள்ளவும் கேரட் - 1 நீளமாக நறுக்கவும் பீன்ஸ் - 4 நீளமாக நறுக்கவும் பச்சை பட்டாணி - 1/4 கப் பிரிஞ்சி இலை - 1 பட்டை - சிறிய துண்டு சீரகம் - 1/4 டீஸ்பூன் ஏலக்காய் - 2 கிராம்பு - 2 முந்திரிப்பருப்பு - 7 கொத்தமல்லி இலை - சிறிதளவு உப்பு - தேவையான அளவு நெய் - 1 டேபிள் ஸ்பூன் செய்முறை பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி தண்ணீரை முழுவதும் வடித்து கொள்ளவும். முந்திரிபருப்பை சிறிது நெய் விட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். ஒரு அகலமான கனமான கடாயில் நெய் விட்டு சூடானதும் பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் சீரகம் சேர்த்து நன்கு வாசனை வந்ததும் வெங்காயம் மற்றும் கீறிய பச்சை மிளகாய் ச...