Skip to main content

கார வடை - பட்டாணி பருப்பு போண்டா - Kara Vadai

எந்த ஒரு விசேஷம் அல்லது வீட்டில் நடக்கும் பார்ட்டிக்கு நாம் பெரும்பாலும் உளுந்த வடை அல்லது பஜ்ஜி செய்வதுண்டு. ஒரு மாறுதலுக்கு இந்த சுவையான பட்டாணி பருப்பு  கார போண்டா
செய்து பாருங்கள். பட்டாணி பருப்பு கார போண்டா வெளியே முறுகலாகவும் உள்ளே மிருதுவாகவும் இருக்கும். இந்த போண்டா நேரமானாலும் அதன் சுவை மாறாது. 



தேவையான பொருட்கள்
  • 1.25 கப் பட்டாணி பருப்பு
  • 1 கப் உளுத்தம்பருப்பு
  • 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
  • 2 வெங்காயம், பொடியாக நறுக்கியது
  • 2 பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது
  • சிறிதளவு கொத்தமல்லி இலை
  • சிறிதளவு புதினா
  • சிறிதளவு கறிவேப்பிலை
  • உப்பு தேவையான அளவு
  • கடலை எண்ணெய்
செய்முறை
  1. ஒரு அகலமான பாத்திரத்தில் பட்டாணி பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பை அளந்து எடுத்துக் கொள்ளவும். பின் 2 கப் தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
  2. பின் தண்ணீரில் 3 முறை நன்கு கழுவி விட்டு தண்ணீரை முழுவதும் வடித்து வைக்கவும்.
  3. கிரைண்டரை நன்றாக தண்ணீரில் கழுவி விட்டு ஊறவைத்த பருப்பை சேர்த்து அரைக்கவும்.
  4. சிறிது தண்ணீர் தெளித்து நன்கு பொங்க பொங்க அரைத்துக் கொள்ளவும். மாவு வெண்ணெய் போல் நன்கு மிருதுவாக இருக்கும்.
  5. மாவு நன்கு அரைந்ததும் பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும்.
  6. பின் அதில் அரிசி மாவு, நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, புதினா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  7. மாவில்  தண்ணீர் அதிகமாக இருந்தால் சிறிது அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  8. வாணலியில் கடலை எண்ணெய் விட்டு சூடானதும் பிசைந்த மாவை ஈரமான கை வைத்து சிறு உருண்டைகளாக உருட்டி சூடான எண்ணெயில் போட்டு மிதமான சூட்டில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சூடாக பரிமாறவும்.

Comments

Popular posts from this blog

குடமிளகாய் உருளைக்கிழங்கு மசாலா - Capsicum Potato Masala

குடமிளகாய் மற்றும் உருளைக்கிழங்கை வைத்து ஒரு திடீர் சைட் டிஷ். எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம் அல்லது சப்பாத்தி, பூரிக்கு பரிமாறலாம். குடமிளகாயை அதிக நேரம் எண்ணெயில் வதக்கினால் அதன் நிறமும் சுவையும் மாறிவிடும். இதில் சாம்பார் பொடிக்கு பதிலாக சிறிது மிளகாய்த்தூள் அல்லது மிளகுத்தூள் சேர்த்து செய்யலாம். தேவையான பொருட்கள் 1 பச்சை குடைமிளகாய் 1 உருளைக்கிழங்கு 1/4 டீஸ்பூன் சீரகம் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் சாம்பார் பொடி 1 டேபிள் ஸ்பூன் புளிக்கரைசல் 1 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி இலை 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் உப்பு தேவையான அளவு செய்முறை குடைமிளகாய் மற்றும் உருளைக் கிழங்கை நீளமாக நறுக்கி கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம் சேர்த்து பொரிந்ததும் நறுக்கிய கிழங்கை சேர்த்து வதக்கவும். அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். உருளைக்கிழங்கு நன்கு வதங்கியதும் நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து வதக்கவும். தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.  குடைமிளகாய் லேசாக வதங்கியதும் புளிக்கரைசல் மற்றும் சாம்பார்  பொடி சேர்த்து 2 நிமிடங்கள் கெட்டியானத...

உளுந்தம் பருப்பு சோறு - Black Urid Dal Rice (Ulundham Paruppu Sadham)

உளுந்தம்பருப்பு சோறு - கருப்பு உளுந்து, அரிசி, தேங்காய் துருவல் மற்றும் வெந்தயம் சேர்த்து ஒரு ஆரோக்கியமான சாதம். இந்த சாதத்தை எள்ளு துவையல் போட்டு பிசைந்து அவியல் வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.  தேவையான பொருட்கள் புழுங்கல் அரிசி - 1கப் கருப்பு உளுந்தம் பருப்பு - 1/4 கப் மற்றும் ஒரு கை வெந்தயம் - 1 டீஸ்பூன் பூண்டு பற்கள் - 10 தேங்காய்த்துருவல் - 1/2 கப் தண்ணீர் - 3 கப் நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை வாணலியை அடுப்பில் வைத்து லேசாக சூடாக்கி அதில் வெந்தயத்தை சேர்த்து வறுக்கவும். வெந்தயம் லேசாக வெடிக்க ஆரம்பித்ததும் கருப்பு உளுந்தம் பருப்பை சேர்த்து நன்கு  வாசனை வரும் வரை வறுக்கவும்.  ஒரு அகலமான பாத்திரத்தில் அரிசியோடு வறுத்த பருப்பையும் சேர்த்து நன்கு கழுவி விட்டு 1 கப் தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும். ஒரு பிரஷர் குக்கரில் ஊறவைத்த அரிசி, மேலும் 2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும். பின் அதில் தேவையான அளவு உப்பு, தேங்காய் துருவல் மற்றும் நல்லெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். குக்கரை மூடி வைத்து 3 வி...

தேங்காய் பராத்தா - Coconut Paratha

தேங்காய் பராத்தா மிக எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய எளிமையான உணவாகும். எந்த வயதினருக்கும் ஏற்றது.   தேவையான பொருட்கள் கோதுமை மாவு - 2 கப் தேங்காய்காய் துருவல் - 1 கப் பச்சை மிளகாய் - 1, பொடியாக நறுக்கிக் கொள்ளவும் புதினா - 4 இலைகள் கொத்தமல்லி இலை - சிறிதளவு நெய் - 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் தேவையான அளவு உப்பு தேவையான அளவு செய்முறை ஒரு அகலமான பவுலில் கோதுமை மாவு, நெய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மாவு கைகளில் ஒட்டாத பதம் வரும் வரை பிசைந்து கொள்ளவும். மாவின் மேலே சிறிது எண்ணெய் தடவி 20 நிமிடங்கள் வைக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் புதினா சேர்த்து லேசாக வதக்கவும். பின் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வதக்கவும். அவை நன்கு வதங்கியதும் ஒரு சிறிய கிண்ணத்தில் மாற்றி ஆறவிடவும். பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பின் சிறிய சப்பாத்தியாக போட்டு நடுவில் 1 டேபிள் ஸ்பூன் வதக...