Skip to main content

Posts

Showing posts with the label திருநெல்வேலி உணவுகள்

கருப்பு உளுந்து சின்ன வெங்காயம் சட்னி - Small Onion Black Urid dal Chutney

கருப்பு உளுந்து, சின்ன வெங்காயம், பூண்டு பற்கள் மற்றும் மிளகாய் வற்றலை வறுத்து அரைக்கவும். இதில் வறுத்த கருப்பு உளுந்தை கடைசியாக சேர்த்து அரைக்கவும். இந்த சட்னி இட்லி, தோசை, கேப்பை தோசைக்கு நன்றாக இருக்கும்.  தேவையான பொருட்கள் 15 சின்ன வெங்காயம் 5 பூண்டு பற்கள் 1.5 டேபிள் ஸ்பூன் கருப்பு உளுந்து 8 காய்ந்த மிளகாய் சிறிது புளி 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் சிறிது கல் உப்பு செய்முறை சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு பற்கள் தோலை உரித்து கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் கருப்பு உளுந்தம் பருப்பை சேர்த்து நன்கு வாசம் வரும் வரை வறுத்து தனியே எடுத்து வைக்கவும். பின் அதே வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் காய்ந்த மிளகாய் சேர்த்து லேசாக வறுத்து தனியே எடுத்து வைக்கவும். பின் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு பற்கள் சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை வறுத்துக்கொள்ளவும். அடுப்பை அனைக்கும் போது புளியை சேர்க்கவும். ஒரு சிறிய சட்னி ஜாரில் கல் உப்பு மற்றும் வறுத்த காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். (புளியை ஊறவைத்...

வெந்தய மிளகாய் - Green Chilly Pickle

பச்சை மிளகாயிலுள்ள கேப்சிக்கோ என்ற வேதிப்பொருள் பல்வேறு மருத்துவ குணங்களுடைய வெந்தயத்தோடு சேர்ந்து நாவிற்கு சுவையான சைட் டிஷை அளிப்பதோடு நமது உடலுக்குத் தேவையான பல நன்மைகளைத் தருகிறது. மேலும் எண்ணெயில் பச்சைமிளகாயை வதக்குவதால் காரம் குறைவாக இருக்கும்.   தேவையான பொருட்கள் பச்சை மிளகாய் - 25 வெந்தயம் - 2 டீஸ்பூன் கட்டிப் பெருங்காயம் ‌‌ - சிறிய துண்டு நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை பச்சை மிளகாயை நன்கு கழுவிக் கொள்ளவும். பின் ஒரு வெள்ளை துணியால் ஈரம் இல்லாமல் துடைத்துக் கொள்ளவும். பின் நடுவில் கீறிக் கொள்ளவும். ஒரு வாணலியில் வெந்தயத்தை போட்டு வாசம் வரும் வரை வறுத்துக்  கொள்ளவும். பின் ஒரு தட்டில் மாற்றவும். அதே வாணலியில் ஒரு துளி எண்ணெய் விட்டு கட்டி பெருங்காயத்தை போட்டு பொரிந்ததும் அடுப்பை அணைத்து விடவும். பின் ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் வறுத்த வெந்தயம், வறுத்த காயம் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பொடித்துக் கொள்ளவும். இப்போது ஒரு சிறிய ஸ்பூன் வைத்து சிறிதளவு பொடித்த பொடியை ஒவ்வொரு பச்சை மிளகாயின் நடுவில் வைத்து 2 பக்களிலும...

உளுந்தம் பருப்பு சோறு - Black Urid Dal Rice (Ulundham Paruppu Sadham)

உளுந்தம்பருப்பு சோறு - கருப்பு உளுந்து, அரிசி, தேங்காய் துருவல் மற்றும் வெந்தயம் சேர்த்து ஒரு ஆரோக்கியமான சாதம். இந்த சாதத்தை எள்ளு துவையல் போட்டு பிசைந்து அவியல் வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.  தேவையான பொருட்கள் புழுங்கல் அரிசி - 1கப் கருப்பு உளுந்தம் பருப்பு - 1/4 கப் மற்றும் ஒரு கை வெந்தயம் - 1 டீஸ்பூன் பூண்டு பற்கள் - 10 தேங்காய்த்துருவல் - 1/2 கப் தண்ணீர் - 3 கப் நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை வாணலியை அடுப்பில் வைத்து லேசாக சூடாக்கி அதில் வெந்தயத்தை சேர்த்து வறுக்கவும். வெந்தயம் லேசாக வெடிக்க ஆரம்பித்ததும் கருப்பு உளுந்தம் பருப்பை சேர்த்து நன்கு  வாசனை வரும் வரை வறுக்கவும்.  ஒரு அகலமான பாத்திரத்தில் அரிசியோடு வறுத்த பருப்பையும் சேர்த்து நன்கு கழுவி விட்டு 1 கப் தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும். ஒரு பிரஷர் குக்கரில் ஊறவைத்த அரிசி, மேலும் 2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும். பின் அதில் தேவையான அளவு உப்பு, தேங்காய் துருவல் மற்றும் நல்லெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். குக்கரை மூடி வைத்து 3 வி...

திருநெல்வேலி சாம்பார் - Tirunelveli Sambar

திருநெல்வேலி சாம்பாரின் சிறப்பு என்னவென்றால் இதில் சேர்க்கும் தேங்காய், சின்ன வெங்காயம், பூண்டு மற்றும் சீரகம் சேர்த்து அரைக்கும் விழுது. சாம்பாரின் சுவை அதில் சேர்க்கும் காய்கறிகளில் அடங்கியுள்ளது. முருங்கைக்காய், வெண்டைக்காய், கத்திரிக்காய், மாங்காய் மற்றும் சின்ன வெங்காயம் முக்கிய காய்கறிகளாகும்.  தேவையான பொருட்கள் 1/4 கப் துவரம்பருப்பு 1 டேபிள் ஸ்பூன் புளி 1 முருங்கைக்காய் 1 கத்தரிக்காய் 4 வெண்டைக்காய் 1 தக்காளி 12 சின்ன வெங்காயம் 2 பச்சை மிளகாய் 1/4 டீஸ்பூன் வெந்தயம் 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள் 2.5 டேபிள் ஸ்பூன் சாம்பார் பொடி 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள் சிறிது கறிவேப்பிலை சிறிது கொத்தமல்லி இலை 1/2 டீஸ்பூன் கடுகு 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் உப்பு தேவையான அளவு அரைக்க 4 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல் 3 சின்ன வெங்காயம் 2 பூண்டு பற்கள் 1/2 டீஸ்பூன் சீரகம் செய்முறை ஒரு பாத்திரத்தில் புளியை கொதிக்கும் நீரில் போட்டு 30 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும். துவரம்பருப்பை நன்றாக கழுவி விட்டு 1 கப் தண்ணீர் ஊற்றி ஊறவைத்து கொள்ளவும்...

திருநெல்வேலி புளிக்குழம்பு - Tirunelveli Pulikuzhambu

திருநெல்வேலி புளிக்குழம்பு - இது பார்ப்பதற்கு வத்தக்குழம்பு போல் இருக்கும் ஆனால் இதன் செய்முறை வித்தியாசமாக இருக்கும். மிளகு, சீரகம், மிளகாய் வற்றல், தனியா, துவரம்பருப்பு, கறிவேப்பிலை முதலிய பொருட்களை நன்கு வறுத்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை புளிக்கரைச்சலோடு சேர்த்து செய்யும் குழம்பு. இதில் சின்ன வெங்காயம், பூண்டு பற்கள் மற்றும் சுண்டைக்காய் வற்றல் அல்லது கத்திரிக்காய் ஆகியவற்றை நல்லெண்ணெயில் வதக்கி குழம்பில் சேர்த்துக் கொள்ளவும். இதில் கடைசியாக சிறிது பொடித்த கருப்பட்டி அல்லது வெல்லம் சேர்த்து கொள்வதை மறந்து விடாதீர்கள். தேவையான பொருட்கள் பெரிய எலுமிச்சை அளவு புளி 15 சின்ன வெங்காயம் 15 பூண்டு பற்கள் 1 முருங்கைக்காய் அல்லது 4 கத்தரிக்காய் சிறிய துண்டு கருப்பட்டி 1/4 டீஸ்பூன் வெந்தயம் 1/2 டீஸ்பூன் கடுகு 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு சிறிது கறிவேப்பிலை 5 டேபிள் நல்லெண்ணெய் உப்பு தேவையான அளவு வறுத்து அரைக்க 9 காய்ந்த மிளகாய் 3 டீஸ்பூன் மிளகு 1 டீஸ்பூன் சீரகம் 2 டீஸ்பூன் துவரம்பருப்பு 1 டேபிள் ஸ்பூன் தனியா 1/2 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு 10 கறிவேப...

சிறுகீரை தொவரம் (பொரியல்) - Sirukeerai Poriyal

சிறுகீரை தொவரம் (பொரியல்) - பொடியாக நறுக்கிய கீரையோடு சின்ன வெங்காயம் தாளித்து அரைத்த தேங்காய் விழுது, சிறிது வேகவைத்த பருப்பும் சேர்த்து சுவையான ஆரோக்கியமான பொரியல். இதை திருநெல்வேலி சமையலில் கொத்திக் கீரை என்று கூறுவோம். இதில் சிறுகீரைக்கு பதிலாக அரைக்கீரை, முளைக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை வைத்து செய்யலாம். தேவையானவை பொருட்கள் சிறுகீரை - 1 கட்டு பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 1/4 கப் வேகவைத்த பருப்பு - 3 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் - 1 மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன் எண்ணெய் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு அரைக்க தேங்காய்த்துருவல் - 4 டேபிள் ஸ்பூன் சின்ன வெங்காயம் - 3 பூண்டு பற்கள் - 2 காய்ந்த மிளகாய் - 1 சீரகம் - 1/2 டீஸ்பூன் செய்முறை சீறுகீரையின் இளம் தண்டுகளோடு இருக்கும் இலைகளை தண்டோடு சேர்த்து ஆய்ந்துக் கொள்ளவும். தண்ணீரில் இரண்டு முறை மண் போக கழுவிக் கொள்ளவும். பின் வரிசையாக அடுக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காய்த்துருவல், சின்ன வெங்காயம், பூண்டு பற்கள், மிளகாய் வற்றல் மற்றும் சீரகம் சேர்த்த...

வாழைக்காய் புட்டு (பொடிமாஸ்) - Plantain Puttu

வாழைக்காய் புட்டு - பத்தே நிமிடத்தில் சுவையான சைட் டிஷ். வேகவைத்த வாழைக்காயை பொடியாக துருவி தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து இறக்கினால் சுவையான வாழைக்காய் புட்டு தயார். சாம்பார், ரசம் மற்றும் எந்த வகையான குழம்புகளுக்கும் சுவையாக இருக்கும். தேவையானவை பொருட்கள் வாழைக்காய் - 2 வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 2 தேங்காய் துருவல் - 1/4 கப் கறிவேப்பிலை - சிறிதளவு கடுகு - 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன் எண்ணெய் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை வாழைக்காயை நன்கு கழுவி ஓரங்களை நறுக்கிக் கொள்ளவும். பின் பாதியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நறுக்கிய வாழைக்காயை சேர்த்து மூடி வைத்து வேக விடவும். வாழைக்காயின் தோல் கருப்பாக மாறும் போது நடுவில் ஒரு கத்தியால் குத்திப் பார்த்தால் பூவாக இருக்கும். பின் தண்ணீரை முழுவதும் வடித்து ஒரு தட்டில் வைத்து ஆறவைத்து தோலை உரித்து கொள்ளவும். பின் கேரட் துருவியில் பொடியாக துருவிக் கொள்ளவும். வாழைக்காய் துருவலோடு தேவையான அளவு ...

திருநெல்வேலி கூட்டாஞ்சோறு - Tirunelveli Kootanchoru

கூட்டாஞ்சோறு - திருநெல்வேலியின் மிகவும் பிரபலமான மதிய உணவு. காய்கறிகள், பருப்பு, அரிசி மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்து ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான சோறு. இதற்கு நாட்டு வாழைக்காய், வெள்ளை கத்திரிக்காய், முருங்கைக்காய், கொத்தவரங்காய், மாங்காய் மற்றும் முருங்கைக்கீரை முக்கிய காய்கறிகளாகும். இந்த சோறு செய்து ஆறிய பின் இதில் இருக்கும் புளிப்பு மற்றும் காரம் சமமாக சேர்ந்து சுவையாக இருக்கும். இதற்கு கூழ் வத்தல் அல்லது அப்பளம் வைத்து பரிமாறவும் . தேவையான பொருட்கள் 2 கப் புழுங்கல் அரிசி 1/2 கப் துவரம்பருப்பு பெரிய எலுமிச்சை அளவு புளி 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள் 10 சின்ன வெங்காயம் 3 பச்சை மிளகாய் உப்பு தேவையான அளவு காய்கறிகள் 2 கேரட் 10 பீன்ஸ் 10 கொத்தவரங்காய் 2 முருங்கைக்காய் 7 கத்தரிக்காய் 1 வாழைக்காய் 1 உருளைக்கிழங்கு சிறிதளவு மாங்காய் துண்டுகள் 1 கப் முருங்கைக்கீரை இலைகள் அரைக்க 1 கப் தேங்காய் துருவல் 20 காய்ந்த மிளகாய் 15 சின்ன வெங்காயம் 10 பூண்டு பற்கள் 1 டேபிள்ஸ்பூன் சீரகம் தாளிக்க 1/2 கடுகு 1/2 டீஸ்பூன் உள...

அவியல் - Aviyal

வாழைக்காய், கத்திரிக்காய், கேரட், பீன்ஸ் போன்ற பல காய்கறிகளை சேர்த்து சுவையான ஆரோக்கியமான அவியல். திருநெல்வேலியில் வெள்ளை கத்திரிக்காய் சேர்த்து செய்வது வழக்கம். சாம்பார், புளிக்குழம்பு மற்றும் உளுந்தம் பருப்பு சாதத்திற்கு அருமையாக இருக்கும்.  தேவையானவை பொருட்கள் வாழைக்காய் - 1 கேரட் - 2 பீன்ஸ் - 9 கத்திரிக்காய் - 7 உருளைக்கிழங்கு - 1 முருங்கைக்காய் - 7 துண்டுகள் மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன் புளித்த தயிர் - 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை - 10 உப்பு - தேவையான அளவு அரைக்க தேங்காய் துருவல் - 5 டேபிள்ஸ்பூன் சின்ன வெங்காயம் - 4 பூண்டு பற்கள் - 2 பச்சை மிளகாய் - 3 சீரகம் - 1 டீஸ்பூன் தாளிக்க கடுகு - 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன் செய்முறை கேரட்டை தோல் சீவி நீளமாக நறுக்கிக் கொள்ளவும். பீன்ஸையும் நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கை தோல் சீவி நீளமாக நறுக்கிக் கொள்ளவும். வாழைக்காய்யையும் தோல் சீவி நீளமாக நறுக்கிக் கொள்ளவும். கத்திரிக்காய் காம்பை நீக்கி பாதியாக நறுக்கி மீண்டும...

முட்டைக்கோஸ் கேரட் பீன்ஸ் தொவரம் (பொரியல்) - Cabbage Carrot Beans Poriyal

திருநெல்வேலியில் இதை கதம்ப பொரியல் என்று அழைப்பது வழக்கம். வாரத்தில் ஒரு நாள் இந்த பொரியலை கட்டாயம் செய்வதுண்டு. சாம்பார், ரசம் மற்றும் எந்த வகையான குழம்புகளுக்கும் சுவையாக இருக்கும். இந்த பொரியல் மீதம் இருந்தால் இரவு சுவையான கதம்ப பொரியல் ஊத்தப்பம் செய்திடுவோம். தேவையான பொருட்கள் முட்டைக்கோஸ் - 250 கிராம் கேரட் - 1 பீன்ஸ் - 7 பச்சை பட்டாணி - 1/4 கப் தேங்காய் துருவல் - 1 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு கடுகு - 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் - சிறிது எண்ணெய் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு அரைக்க தேங்காய் துருவல் - 4 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் - 1 சின்ன வெங்காயம் - 3 பூண்டு - 1 சீரகம் - 1/4 டீஸ்பூன் செய்முறை முட்டைக்கோஸை நன்கு கழுவி தண்டுகளை பிரித்து பொடியாக நறுக்கவும். கேரட் மற்றும் பீன்ஸை பொடியாக நறுக்கவும்.  ஒரு அகலமான பாத்திரத்தில் நறுக்கிய காய்கறிகள் மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் வைத்து வேகவிடவும். அவை வேகும் போது தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சின்...

புளி மிளகாய் - திருநெல்வேலி புளி மிளகாய் - Puli Milagai

தேவையான பொருட்கள் 20 பச்சை மிளகாய் 15 சின்ன வெங்காயம் சிறிய எலுமிச்சை அளவு புளி 1/2 டீஸ்பூன் வெந்தயம் 1/2 டீஸ்பூன் கடுகு 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன் பொடித்த வெல்லம் கறிவேப்பிலை 3 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் உப்பு செய்முறை புளியை சூடான தண்ணீர் விட்டு ஊறவைத்து கொள்ளவும். பின் 1 கப் தண்ணீர் விட்டு கரைத்து வைக்கவும். சின்ன வெங்காயத்தை தோலுரித்து பொடியாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறி பின் பாதியாக நறுக்கி கொள்ளவும். கனமான வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெந்தயம் சேர்த்து பொரிந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து வெடித்ததும் பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். மிளகாய் நிறம் மாறும் வரை வதக்கி பின் புளிக்கரைசல்,  தேவையான உப்பு மற்றும்  மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும். அவை நன்கு கொதித்ததும் கறிவேப்பிலை சேர்த்து சிறிது நேரம் மூடி வைக்கவும். பின் பெருங்காயத்தூள் மற்றும் வெல்லம் சேர்த்து எண்ணெய் மிதக்கும் வரை கொதிக்க வைத்து இறக்கவும். படிப் படியாக பட விளக்கோத்தோடு புளிமிளகாய் ச...