குடமிளகாய் மற்றும் உருளைக்கிழங்கை வைத்து ஒரு திடீர் சைட் டிஷ். எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம் அல்லது சப்பாத்தி, பூரிக்கு பரிமாறலாம். குடமிளகாயை அதிக நேரம் எண்ணெயில் வதக்கினால் அதன் நிறமும் சுவையும் மாறிவிடும். இதில் சாம்பார் பொடிக்கு பதிலாக சிறிது மிளகாய்த்தூள் அல்லது மிளகுத்தூள் சேர்த்து செய்யலாம்.
தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள்
- 1 பச்சை குடைமிளகாய்
- 1 உருளைக்கிழங்கு
- 1/4 டீஸ்பூன் சீரகம்
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டீஸ்பூன் சாம்பார் பொடி
- 1 டேபிள் ஸ்பூன் புளிக்கரைசல்
- 1 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி இலை
- 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- குடைமிளகாய் மற்றும் உருளைக் கிழங்கை நீளமாக நறுக்கி கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம் சேர்த்து பொரிந்ததும் நறுக்கிய கிழங்கை சேர்த்து வதக்கவும். அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
- உருளைக்கிழங்கு நன்கு வதங்கியதும் நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து வதக்கவும். தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.
- குடைமிளகாய் லேசாக வதங்கியதும் புளிக்கரைசல் மற்றும் சாம்பார் பொடி சேர்த்து 2 நிமிடங்கள் கெட்டியானதும் கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான எளிமையான குடைமிளகாய் உருளை மசாலா தயார்.
Comments
Post a Comment