Skip to main content

Posts

Showing posts with the label தக்காளி தேங்காய் சட்னி

தக்காளி தேங்காய் சட்னி - Tomato Coconut Chutney

தக்காளி தேங்காய் சட்னி - இட்லி, தோசை, ரவா தோசை, பனியாரம் போன்ற உணவுகளுக்கு இந்த தக்காளி தேங்காய் சட்னி சுவையாக இருக்கும். இந்த சட்னிக்கு சின்ன வெங்காயம், தக்காளி மற்றும் மிளகாய் வற்றலை வதக்கி அரைத்து கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும். இதற்கு சின்ன வெங்காயம் வைத்து அரைத்தால் நன்றாக இருக்கும். தேவையான பொருட்கள் நன்கு பழுத்த தக்காளி - 1 சின்ன வெங்காயம் - 10 மிளகாய் வற்றல் - 7 தேங்காய்த்துருவல் - 1/4 கப் கடுகு - 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் செய்முறை சின்ன வெங்காயத்தை தோலுரித்துக் கொள்ளவும். தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.  வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் சின்ன வெங்காயத்தை சேர்த்து லேசாக வதக்கவும். பின் மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் தனியாக எடுத்து வைக்கவும்.  அதே வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.  ஒரு சிறிய சட்னி ஜாரில் ஆறவைத்த சின்ன வெங்காயம், மிளகாய் வற்றல் மற்றும் உப...