Skip to main content

Posts

Showing posts with the label நேந்திரம் பழம் அல்வா

நேந்திரம் பழம் அல்வா - Nenthram Pazham Halwa

நேந்திரம் பழம் அல்வா  பள்ளியிலிருந்து வரும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான மூன்று பொருட்களை  வைத்து  பத்தே நிமிடத்தில் தித்திப்பான அல்வா செய்திடலாம். நேந்திரம் பழம் மற்றும் வெல்லம் ஆகிய இரண்டு பொருட்களிலும் இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளதால் இந்த அல்வா எல்லா வயதினருக்கும் ஏற்ற இனிப்பாகும். தேவையான பொருட்கள் நன்கு பழுத்த நேந்திரம் பழம் - 3 பாகு வெல்லம் - 200 கிராம் நெய் - 4 டேபிள்ஸ்பூன் செய்முறை நேந்திரம் பழத்தின் தோலை உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெல்லத்தை நன்கு பொடித்துக் கொள்ளவும். ஒரு கனமான கடாயில் 2 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய பழத்தை போட்டு கைவிடாமல் வதக்கவும்.  பழம் நன்கு மசிந்து வரும் வரை கைவிடாமல் வதக்கவும். பழம் நன்கு வெந்ததும் துருவிய வெல்லத்தை போட்டு மேலும் சிறிது சிறிதாக நெய் விட்டு கிளறவும். வெல்லம் நன்கு கரைந்து பழத்தோடு சேரும் வரை கைவிடாமல் கிளறவும். அல்வா நன்கு ஒட்டாமல் நெய் மிதக்கும் வரும் வரை கிளறி இறக்கவும். சூடாக பரிமாறவும்.  குறிப்பு இந்த அல்வாவிற்கு நேந்திரம் பழத்தின்...