Skip to main content

Posts

Showing posts with the label காரக்குழம்பு

காரக்குழம்பு - Karakuzhambu

இந்த காரக்குழம்பை ஒரு நாள் மதிய உணவாக ஹோட்டலில் சாப்பிடும் போது சுவைத்தேன். மிகவும் அருமையாக இருந்தது. பின் வீட்டில் வந்து செய்து பார்த்தேன்.  இந்த காரக்குழம்புக்கு மசாலா பொருட்கள் வறுக்கும் போது பதமாக வாசனை வரும் வரை வறுக்கவும். அதேபோல் குறிப்பிட்டள்ள அளவுக்கு மேல் பொருட்கள் சேர்க்க வேண்டாம். ஏனென்றால் குழம்பு கெட்டியாகிவிடும். இந்த குழம்பு தண்ணியாகவும் இருக்கக்கூடாது கெட்டியாகவும் இருக்கக்கூடாது. இதில் சுண்டைக்காய் வற்றலுக்கு பதிலாக கத்திரிக்காய் அல்லது மணத்தக்காளி வற்றல் வைத்து செய்யலாம்.  தேவையான பொருட்கள் 10 சின்ன வெங்காயம் 7 பூண்டு பற்கள் 1 தக்காளி 2 டேபிள் ஸ்பூன் சுண்டைக்காய் வற்றல் 2 காய்ந்த மிளகாய் 2 டீஸ்பூன் சாம்பார் பொடி 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள் சிறிது கறிவேப்பிலை 1/2 டீஸ்பூன் கடுகு 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு 1/4 டீஸ்பூன் வெந்தயம் 7 டேபிள் ஸ்பூன் கடலை எண்ணெய் உப்பு தேவையான அளவு அரைக்க 1 டேபிள் கடலைப்பருப்பு 1 டேபிள் ஸ்பூன் தனியா 1 டீஸ்பூன் சீரகம் 1 டீஸ்பூன் சோம்பு 1/4 கப் தேங்காய் துருவல் 6 சின்ன வெங்காயம் 1 தக்காளி 6 காய்...