Skip to main content

கருப்பு உளுந்து சின்ன வெங்காயம் சட்னி - Small Onion Black Urid dal Chutney

கருப்பு உளுந்து, சின்ன வெங்காயம், பூண்டு பற்கள் மற்றும் மிளகாய் வற்றலை வறுத்து அரைக்கவும். இதில் வறுத்த கருப்பு உளுந்தை கடைசியாக சேர்த்து அரைக்கவும். இந்த சட்னி இட்லி, தோசை, கேப்பை தோசைக்கு நன்றாக இருக்கும். 



தேவையான பொருட்கள்
  • 15 சின்ன வெங்காயம்
  • 5 பூண்டு பற்கள்
  • 1.5 டேபிள் ஸ்பூன் கருப்பு உளுந்து
  • 8 காய்ந்த மிளகாய்
  • சிறிது புளி
  • 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 2 டீஸ்பூன் நல்லெண்ணெய்
  • சிறிது கல் உப்பு
செய்முறை
  1. சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு பற்கள் தோலை உரித்து கொள்ளவும்.
  2. வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் கருப்பு உளுந்தம் பருப்பை சேர்த்து நன்கு வாசம் வரும் வரை வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
  3. பின் அதே வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் காய்ந்த மிளகாய் சேர்த்து லேசாக வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
  4. பின் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு பற்கள் சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை வறுத்துக்கொள்ளவும். அடுப்பை அனைக்கும் போது புளியை சேர்க்கவும்.
  5. ஒரு சிறிய சட்னி ஜாரில் கல் உப்பு மற்றும் வறுத்த காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். (புளியை ஊறவைத்து சேர்த்தால் இப்போது சேர்த்து கொள்ளவும்.)
  6. பின் வதக்கிய சின்ன வெங்காயம், பூண்டு மற்றும் புளி சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும்.
  7. கடைசியாக வறுத்து வைத்துள்ள கருப்பு உளுந்தை மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து லேசாக அரைக்கவும். பின் பரிமாறும் கிண்ணத்தில் மாற்றி சிறிது தண்ணீர் விட்டு நன்றாக கலந்து விடவும்.
படிப்படியாக படத்துடன் கருப்பு உளுந்து சின்ன வெங்காயம் துவையல் விளக்கம் காண கீழே இருக்கும் லிங்க் மேலே கிளிக் செய்யவும்.
Small onion Chutney with Black urid dal @virundhombal.com

Comments