கும்பகோணம் கடப்பா - பாசிப்பருப்பு உருளைக்கிழங்கு மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்து ஒரு சுவையான சைட் டிஷ். இடியாப்பம், ஆப்பம், இட்லி, தோசைக்கு இதை பரிமாறலாம்.
தேவையான பொருட்கள்
- 1/4 கப் பாசிப்பருப்பு
- 2 உருளைக்கிழங்கு
- 1 வெங்காயம்
- 1 தக்காளி
- 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள்
- 1/2 டீஸ்பூன் கடுகு
- 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
- சிறிது பட்டை
- 3 கிராம்பு
- 1 எலுமிச்சை
- சிறிது கொத்தமல்லி இலை
- சிறிது கறிவேப்பிலை
- 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
- உப்பு தேவையான அளவு
அரைக்க
- 1/2 கப் தேங்காய் துருவல்
- 2 பச்சை மிளகாய்
- 4 பல் பூண்டு
- சிறிய துண்டு இஞ்சி
- 1 டீஸ்பூன் சோம்பு
- 1/2 டீஸ்பூன் கசகசா
- 1 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை
செய்முறை
- பாசிப்பருப்பை லேசாக வறுத்துக் கொள்ளவும்.
- அவை ஆறிய பின் தண்ணீரில் கழுவிக்கொண்டு குக்கரில் சேர்த்து 1 கப் தண்ணீர் மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து 4 விசில் வரும் வரை வேக வைத்து கொள்ளவும்.
- ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சோம்பு, கசகசா, பொட்டுக்கடலை, பூண்டு மற்றும் இஞ்சி சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை கிராம்பு சேர்த்து பொரிந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
- குக்கரை திறந்து பருப்பை மசித்து கொள்ளவும். கிழங்கை லேசாக மசித்து கொள்ளவும்.
- தக்காளி நன்கு வதங்கியதும் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்.
- பின் வேகவைத்த பருப்பை சேர்த்து 2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
- கடப்பா கொதிக்க ஆரம்பித்ததும் உருளைக்கிழங்கு சேர்த்து சிறிது நேரம் கொதித்ததும் இறக்கவும்.
- கொத்தமல்லி இலை மற்றும் எலுமிச்சை சாறு கலந்து பரிமாறவும்.
Comments
Post a Comment