Skip to main content

Posts

Showing posts with the label சப்ஜி வகைகள்

காலிஃப்ளவர் உருளைக்கிழங்கு சப்ஜி - ஆலூ கோபி - Aloo Gobi

தேவையான பொருட்கள் 1 சிறிய காலிஃப்ளவர் 2 உருளைக்கிழங்கு 1 டீஸ்பூன் சீரகம் 1 பச்சை மிளகாய் 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள் 1/4 கப் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் உப்பு தேவையான அளவு செய்முறை காலிஃப்ளவர் பூக்களை கொதிக்கும் நீரில் சிறிது உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். பின் தண்ணீரை வடிகட்டவும். உருளைக்கிழங்கை தோல் சீவி நறுக்கிக் கொள்ளவும். 2 லிட்டர் சிறிய பிரஷர் குக்கரில் அல்லது பேனில் 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம் போட்டு தாளிக்கவும். பின் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அவை வதங்கியதும் உருளைக்கிழங்கு சேர்த்து கைவிடாமல் வதக்கவும். உருளைக்கிழங்கு வதங்கியதும் வடிகெட்டிய காலிஃப்ளவர் சேர்த்து நன்கு வதக்கவும். பின் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து சமமாக கிளறவும். விருப்பப்பட்டால் சிறிது கரம் மசாலா தூள் சேர்த்து கொள்ளலாம். மேலும் 2 நிமிடங்கள் வதக்கவும். இப்போது குக்கரின் மூடியை‌ போடுங்கள். மிக குறைந்த தீயில் வைக்கவும். லேசாக ஆவி வரும் போது குக்கரின் விசில...