வீட்டிலேயே சுவையான ஹோட்டல் ஸ்டைல் பனீர் பட்டர் மசாலா. இதற்கு நன்கு பழுத்த தக்காளி பழம் வைத்து செய்தால் நன்றாக இருக்கும். முந்திரிப் பருப்பை 1 மணி நேரம் நன்கு ஊறவைத்து அரைத்து சேர்த்தால் கிரேவி நன்கு கெட்டியாக இருக்கும். தேவையான பொருட்கள் 250 கிராம் பனீர் 6 பூண்டு 1 டீஸ்பூன் இஞ்சி 6 நன்கு பழுத்த தக்காளி 12 முந்திரிப்பருப்பு 1 பிரிஞ்சி இலை 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் 1 டீஸ்பூன் கஷ்மீர் மிளகாய் தூள் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள் 1/2 டீஸ்பூன் சர்க்கரை 1 டேபிள் ஸ்பூன் கஸுரி மேத்தி இலைகள் 1 டேபிள் ஸ்பூன் ஃப்ரெஷ் கிரீம் உப்பு தேவையான அளவு செய்முறை 1. தக்காளியை நன்றாக கழுவிக்கொள்ளவும். பின் கத்தியால் x வடிவில் லேசாக கீறிக் கொள்ளவும்.பின் தண்ணீர் விட்டு வேகவைத்து கொள்ளவும். பின் தோலுரித்துக்கொள்ளவும். 2. ஒரு கிண்ணத்தில் முந்திரி பருப்பை இளஞ்சூடான தண்ணீரில் 1 மணி நேரம்ஊறவைக்கவும். பின் நைஸாக அரைக்கவும். 3. இஞ்சி பூண்டு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். பின் வேகவைத்த தக்காளியை நைசாக அரைத்துக்கொள்ளவும். 4. ...