Skip to main content

Posts

Showing posts with the label பலகாரம்

தேன் குழல் - பலகாரம் - Thenkuzhal

இந்த தேன் குழல் அரிசியை ஊறவைத்து அரைத்து செய்வது. அரிசியை அரைத்து செய்வதினால் இதன் நிறமும் சுவையும் அற்புதமாக இருக்கும். கீழே சில முக்கிய டிப்ஸ்களோடு விளக்கம் கொடுத்துள்ளேன். நீங்களும் வீட்டிலேயே சுவையான தேன்குழலை செய்து பாருங்களேன்.  தேவையான பொருட்கள் 2 கப் (500 கிராம்)   இட்லி அரிசி 1/2 கப் உளுந்தம்பருப்பு மாவு 1.5 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் 1 டீஸ்பூன் கருப்பு எள் 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள் 3/4 கப் தண்ணீர் 750 மில்லி தேங்காய் எண்ணெய் உப்பு தேவையான அளவு செய்முறை ஒரு அகலமான பாத்திரத்தில் அரிசியை எடுத்துக் கொள்ளவும். அதில் 5 கப் தண்ணீர் ஊற்றி 3 முதல் 4 மணி நேரம் ஊறவத்துக் கொள்ளவும். பின் 3 முறை தண்ணீரில் கழுவிக் கொள்ளவும். தண்ணீரை நன்கு வடிகெட்டி கொள்ளவும். பின் கிரைண்டரில் ஊறவைத்த அரிசியை சிறிது சிறிதாக சேர்த்துக் கொள்ளவும். சிறிது தண்ணீர் ஊற்றி அரைக்கவும். இடை இடையே டிரமின்  ஓரங்களில் ஒட்டும் அரிசியை ஒதுக்கி அரைக்கும் அரிசியோடு சேர்க்கவும். தண்ணீரை கவனமாக சிறிது சிறிதாக சேர்க்கவும். மாவு அரைக்கும் நேரத்தில் உளுந்தம்பருப்பு மாவை நன்றாக சலித்துக் கொள...