Skip to main content

Posts

Showing posts with the label புலவ் & பிரியாணி

வெஜிடபிள் பிரியாணி - ஈஸி வெஜிடபிள் பிரியாணி - Vegetable Biryani

குழந்தைகளுக்கு விடுமுறை நாட்களில் இந்த சுலபமான வெஜிடபிள் பிரியாணியை செய்து கொடுங்கள். பழைய பாஸ்மதி அரிசியை வைத்து செய்தால் 1 பங்கு அரிசிக்கு 2 பங்கு தண்ணீர் ஊற்றி வேகவிடவும். எந்த வகையான பிரியாணி அல்லது புலவ்விற்கு வீட்டில் ஃப்ரெஷ்ஷாக அரைக்கும் இஞ்சி பூண்டு விழுது வைத்து செய்தால் மணமாகவும் ருசியாகவும் இருக்கும். தேவையான பொருட்கள் 1 கப் பாஸ்மதி அரிசி 15 பூண்டு பற்கள் சிறிய துண்டு இஞ்சி 1 கேரட் 7 பீன்ஸ் 1 உருளைக்கிழங்கு 7 காலிஃப்ளவர் பூக்கள் 1/4 கப் பச்சை பட்டாணி 1 வெங்காயம் 2 பச்சை மிளகாய் 2 தக்காளி 1/4 கப் கொத்தமல்லி இலை 1/4 கப் புதினா 2 டேபிள் ஸ்பூன் கெட்டியான தயிர் 2 டீஸ்பூன் பிரியாணி மசாலா தூள் 1 எலுமிச்சை பழம் 1 பிரியாணி இலை 2 சிறிய துண்டு பட்டை 5 கிராம்பு 4 ஏலக்காய் சிறிது கல்பாசி 2 அன்னாசிப்பூ 2 டேபிள் நெய் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் உப்பு தேவையான அளவு செய்முறை ஒரு அகலமான பாத்திரத்தில் பாஸ்மதி அரிசியை சேர்த்து நன்கு கழுவிக் கொள்ளவும். பின் 1 கப் தண்ணீர் ஊற்றி 20 நிமிடங்கள் ஊறவைத்துக் கொள்ளவும். 20 நிமிடங்களுக்கு பின் தண்ணீரை மு...

வெஜிடபிள் புலவ் - Vegetable Pulav

வெஜிடபிள் புலவ் - குறைவான பொருட்கள் வைத்து சுலபமான வெஜிடபிள் புலவ். வீட்டில் நடத்தும் சிறிய பிறந்தநாள் பார்ட்டி அல்லது கெட் டு கெதர்(get together) போன்ற விசேஷங்களுக்கு இந்த புலவ் நன்றாக இருக்கும். இதற்கு எந்த வகையான மசாலா அல்லது குருமா வைத்து பரிமாறவும். தேவையானவை பொருட்கள் பாஸ்மதி அரிசி - 1/2 கப் தண்ணீர் - 1 கப் வெங்காயம் - 1, மெலிதாக நீளமாக நறுக்கியது பச்சை மிளகாய் - 2 கீறிக் கொள்ளவும் கேரட் - 1 நீளமாக நறுக்கவும் பீன்ஸ் - 4 நீளமாக நறுக்கவும் பச்சை பட்டாணி - 1/4 கப் பிரிஞ்சி இலை - 1 பட்டை - சிறிய துண்டு சீரகம் - 1/4 டீஸ்பூன் ஏலக்காய் - 2 கிராம்பு - 2 முந்திரிப்பருப்பு - 7 கொத்தமல்லி இலை - சிறிதளவு உப்பு - தேவையான அளவு நெய் - 1 டேபிள் ஸ்பூன் செய்முறை பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி தண்ணீரை முழுவதும் வடித்து கொள்ளவும். முந்திரிபருப்பை சிறிது நெய் விட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். ஒரு அகலமான கனமான கடாயில் நெய் விட்டு சூடானதும் பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் சீரகம் சேர்த்து நன்கு வாசனை வந்ததும் வெங்காயம் மற்றும் கீறிய பச்சை மிளகாய் ச...