- 20 பச்சை மிளகாய்
- 15 சின்ன வெங்காயம்
- சிறிய எலுமிச்சை அளவு புளி
- 1/2 டீஸ்பூன் வெந்தயம்
- 1/2 டீஸ்பூன் கடுகு
- 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
- 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
- 1 டீஸ்பூன் பொடித்த வெல்லம்
- கறிவேப்பிலை
- 3 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
- உப்பு
செய்முறை
- புளியை சூடான தண்ணீர் விட்டு ஊறவைத்து கொள்ளவும். பின் 1 கப் தண்ணீர் விட்டு கரைத்து வைக்கவும்.
- சின்ன வெங்காயத்தை தோலுரித்து பொடியாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறி பின் பாதியாக நறுக்கி கொள்ளவும்.
- கனமான வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெந்தயம் சேர்த்து பொரிந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து வெடித்ததும் பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- மிளகாய் நிறம் மாறும் வரை வதக்கி பின் புளிக்கரைசல், தேவையான உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
- அவை நன்கு கொதித்ததும் கறிவேப்பிலை சேர்த்து சிறிது நேரம் மூடி வைக்கவும்.
- பின் பெருங்காயத்தூள் மற்றும் வெல்லம் சேர்த்து எண்ணெய் மிதக்கும் வரை கொதிக்க வைத்து இறக்கவும்.
Puli Milagai with step by step instructions @virundhombal.com
Comments
Post a Comment