Skip to main content

Posts

புளி மிளகாய் - திருநெல்வேலி புளி மிளகாய் - Puli Milagai

தேவையான பொருட்கள் 20 பச்சை மிளகாய் 15 சின்ன வெங்காயம் சிறிய எலுமிச்சை அளவு புளி 1/2 டீஸ்பூன் வெந்தயம் 1/2 டீஸ்பூன் கடுகு 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன் பொடித்த வெல்லம் கறிவேப்பிலை 3 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் உப்பு செய்முறை புளியை சூடான தண்ணீர் விட்டு ஊறவைத்து கொள்ளவும். பின் 1 கப் தண்ணீர் விட்டு கரைத்து வைக்கவும். சின்ன வெங்காயத்தை தோலுரித்து பொடியாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறி பின் பாதியாக நறுக்கி கொள்ளவும். கனமான வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெந்தயம் சேர்த்து பொரிந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து வெடித்ததும் பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். மிளகாய் நிறம் மாறும் வரை வதக்கி பின் புளிக்கரைசல்,  தேவையான உப்பு மற்றும்  மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும். அவை நன்கு கொதித்ததும் கறிவேப்பிலை சேர்த்து சிறிது நேரம் மூடி வைக்கவும். பின் பெருங்காயத்தூள் மற்றும் வெல்லம் சேர்த்து எண்ணெய் மிதக்கும் வரை கொதிக்க வைத்து இறக்கவும். படிப் படியாக பட விளக்கோத்தோடு புளிமிளகாய் ச...

காலிஃப்ளவர் உருளைக்கிழங்கு சப்ஜி - ஆலூ கோபி - Aloo Gobi

தேவையான பொருட்கள் 1 சிறிய காலிஃப்ளவர் 2 உருளைக்கிழங்கு 1 டீஸ்பூன் சீரகம் 1 பச்சை மிளகாய் 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள் 1/4 கப் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் உப்பு தேவையான அளவு செய்முறை காலிஃப்ளவர் பூக்களை கொதிக்கும் நீரில் சிறிது உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். பின் தண்ணீரை வடிகட்டவும். உருளைக்கிழங்கை தோல் சீவி நறுக்கிக் கொள்ளவும். 2 லிட்டர் சிறிய பிரஷர் குக்கரில் அல்லது பேனில் 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம் போட்டு தாளிக்கவும். பின் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அவை வதங்கியதும் உருளைக்கிழங்கு சேர்த்து கைவிடாமல் வதக்கவும். உருளைக்கிழங்கு வதங்கியதும் வடிகெட்டிய காலிஃப்ளவர் சேர்த்து நன்கு வதக்கவும். பின் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து சமமாக கிளறவும். விருப்பப்பட்டால் சிறிது கரம் மசாலா தூள் சேர்த்து கொள்ளலாம். மேலும் 2 நிமிடங்கள் வதக்கவும். இப்போது குக்கரின் மூடியை‌ போடுங்கள். மிக குறைந்த தீயில் வைக்கவும். லேசாக ஆவி வரும் போது குக்கரின் விசில...

வெஜிடபிள் கட்லெட் - மாலை நேர சிற்றுண்டி - Vegetable Cutlet

தேவையான பொருட்கள் 4 சிறிய உருளைக்கிழங்கு 1 கேரட் சிறிய துண்டு பீட்ரூட் 1/4 கப் பச்சை பட்டாணி 1 வெங்காயம் 2 பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது 1 டேபிள் டீஸ்பூன் இஞ்சி, பொடியாக நறுக்கியது 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள் 1/2 கப் மைதா மாவு 1/2 கப் பிரெட் தூள் அல்லது ரஸ்க் தூள் 3 பிரெட் ஸ்லைஸ் 1 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி இலை 300 மில்லி எண்ணெய் உப்பு தேவையான அளவு செய்முறை உருளைக்கிழங்கை தோல் சீவிக்கொள்ளவும். கேரட் மற்றும் பீட்ரூட்டை தோல் சீவி பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை பட்டாணியை உரித்து கொள்ளவும். ஒரு சிறிய குக்கரில் நறுக்கிய காய்கறிகளை சேர்த்து 1/2 கப் தண்ணீர் ஊற்றி 2 விசில் வரும் வரை வேகவைத்து கொள்ளவும். பின் வேகவைத்த காய்கறிகளை ஒரு அகலமான பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும். பின் நன்கு ஆறவைத்து கொள்ளவும். ஒரு டம்ளர் வைத்து நன்கு காய்கறிகளை மசித்து கொள்ளவும். ஒரு கனமான கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். அவை நன்கு வதங்கியதும் நறுக்...

திருநெல்வேலி இடி சாம்பார் - Tirunelveli Idi Sambar

தேவையான பொருட்கள் 1/4 கப் துவரம்பருப்பு சிறிய எலுமிச்சை அளவு புளி 15 சின்ன வெங்காயம் 2 பச்சை மிளகாய் 1 அல்லது 2 முருங்கைக்காய் 4 வெண்டைக்காய் 2 கத்திரிக்காய் 5 சிறிய துண்டு மாங்காய் 1/4 டீஸ்பூன் வெந்தயம் 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள் 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள் சிறிதளவு கறிவேப்பிலை சிறிதளவு கொத்தமல்லி இலை 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் உப்பு தேவையான அளவு இடி சாம்பார் பொடி செய்ய 7 காய்ந்த மிளகாய் 1 டேபிள் ஸ்பூன் துவரம்பருப்பு 1/2 டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு 1.5 டேபிள் ஸ்பூன் தனியா 1 டீஸ்பூன் சீரகம் 1/2 டீஸ்பூன் அரிசி 1/2 டீஸ்பூன் மிளகு 1 டீஸ்பூன் கருப்பு உளுந்து சிறிதளவு எண்ணெய் அரைக்க 3 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல் 4 சின்ன வெங்காயம் 3 பூண்டு பற்கள் 1/4 டீஸ்பூன் சீரகம் செய்முறை துவரம்பருப்பை கழுவி விட்டு 20 நிமிடங்கள் ஊறவைத்துக் கொள்ளவும். புளியை இளம் சூடான நீரில் ஊறவைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடலைப்பருப்பு மற்றும் துவரம்பருப்பு சேர்த்து வறுக்கவும். அவை நிறம் மாற ஆரம்பிக்கும் போது தனியா, சீரகம், அ...

மாங்காய் தொக்கு - Raw Mango Thokku

தேவையான பொருட்கள் 3 மாங்காய் 1/2 டேபிள் ஸ்பூன் வெந்தயம் 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள் 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள் 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள் சிறிய துண்டு வெல்லம் 1 டீஸ்பூன் கடுகு 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு 8 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் கல் உப்பு தேவையான அளவு செய்முறை மாங்காயை நன்றாக கழுவி தோல் சீவிக் கொள்ளவும். அதில் 2 மாங்காய்களை கேரட் துருவியில் பொடியாக துருவிக் கொள்ளவும். 1 மாங்காயை சிப்ஸ் சீவும் கட்டையில் துருவிக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து லேசாக சூடாக்கி அதில் வெந்தயத்தை சேர்த்து நன்கு வாசம் வரும் வரை வறுக்கவும். பின் ஒரு தட்டில் மாற்றி ஆறவைத்து ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்துக் கொள்ளவும். ஒரு கனமான கடாயில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் அதில் கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து சீவிய மாங்காய்த்துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கவும். அவை சிறிது வதங்கியதும் துருவிய மாங்காயை சேர்த்து நன்கு வதக்கவும். அதோடு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து சிறிது நேரம் எண்ணெயில் வேகவிடவும். மாங்காய் நன்கு வெந்ததும் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் மற்றும் பெர...

கேரட் சூப் - Carrot Soup

நமது சமையலில் அன்றாடம் பயன்படுத்தும் கேரட் மற்றும் தக்காளியை வைத்து சுவையான சூப் செய்திடலாம். சூப் கெட்டியாக சேர்க்கும் சோளமாவு அல்லது மைதாமாவு இதற்கு தேவையில்லை. காய்கறி சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு இதை வாரம் இருமுறை செய்து கொடுங்கள்.  தேவையான பொருட்கள் கேரட் - 3 தக்காளி - 3 மிளகு - 1 டேபிள்ஸ்பூன் வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை கேரட்டை நன்றாக கழுவி விட்டு தோலை சீவி, பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் ‌. தக்காளியை நன்கு கழுவி நறுக்கிக் கொள்ளவும்.  ஒரு சிறிய பிரஷர் குக்கரில் நறுக்கிய கேரட், தக்காளி, மிளகு மற்றும் காய்கறிகள் முழ்கும் வரை தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும். பின் 2 விசில் வரும் வரை வேகவைத்துக் கொள்ளவும். பின் குக்கரை திறந்து வேகவைத்த காய்கறிகளை நன்கு ஆறவைத்துக் கொள்ளவும். ஒரு பெரிய மிக்ஸி ஜாரில் வேகவைத்த காய்கறிகளை நன்கு அரைத்துக் கொள்ளவும். பின் ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும். அதோடு மேலும் 2 கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும்.  ச...

தேங்காய்ப்பால் கறிவேப்பிலை ஜுஸ் - Coconut Milk Curry leaves Juice

தேங்காய்ப்பாலில் இருக்கும் பல்வேறு மருத்துவ குணங்களை நாம் மறந்து விட்டு நாம் பல்வேறு டின்களில் இருக்கும் ஜூஸை அருந்துகிறோம். இந்த தேங்காய்ப்பால் கறிவேப்பிலை ஜுஸ் காலை உணவாக உட்கொள்ளும் போது அந்த நாள் முழுவதும் நாம் சுறுசுறுப்பாக இருக்க முடியும். குறிப்பாக யோகா செய்வதற்கு இரண்டு மணி நேரம் முன்பு இந்த கறிவேப்பிலை தேங்காய்ப்பால்  ஜுஸ்  அருந்தினால், உடற்பயிற்சிகள் செய்வதற்கு இலகுவாக இருக்கும்.  தேவையான பொருட்கள் தேங்காய் - 1 மூடி கறிவேப்பிலை - 20 இலைகள் ஊறவைத்த  பாதாம் பருப்பு - 5 செய்முறை தேங்காயைத் துருவிக் கொள்ளவும். ஒரு பெரிய மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், கறிவேப்பிலை, ஊறவைத்த பாதாம் பருப்பு மற்றும் 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு அரைக்கவும். பின் ஒரு வெள்ளைத் துணியில் அல்லது பெரிய அரிப்பில் வைத்து வடிகட்டிக் கொள்ளவும். அரைத்த தேங்காய் கறிவேப்பிலை பாதாம் விழுதை மீண்டும் சிறிது தண்ணீர் விட்டு நன்கு அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். நன்கு கலந்து பரிமாறவும். குறிப்பு இதில் கறிவேப்பிலைக்கு பதிலாக கொத்தமல்லி இலை அல்லது புதினா இலைகள் வைத்து...