தேவையான பொருட்கள்
- 4 சிறிய உருளைக்கிழங்கு
- 1 கேரட்
- சிறிய துண்டு பீட்ரூட்
- 1/4 கப் பச்சை பட்டாணி
- 1 வெங்காயம்
- 2 பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது
- 1 டேபிள் டீஸ்பூன் இஞ்சி, பொடியாக நறுக்கியது
- 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள்
- 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
- 1/2 கப் மைதா மாவு
- 1/2 கப் பிரெட் தூள் அல்லது ரஸ்க் தூள்
- 3 பிரெட் ஸ்லைஸ்
- 1 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி இலை
- 300 மில்லி எண்ணெய்
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- உருளைக்கிழங்கை தோல் சீவிக்கொள்ளவும். கேரட் மற்றும் பீட்ரூட்டை தோல் சீவி பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை பட்டாணியை உரித்து கொள்ளவும்.
- ஒரு சிறிய குக்கரில் நறுக்கிய காய்கறிகளை சேர்த்து 1/2 கப் தண்ணீர் ஊற்றி 2 விசில் வரும் வரை வேகவைத்து கொள்ளவும்.
- பின் வேகவைத்த காய்கறிகளை ஒரு அகலமான பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும். பின் நன்கு ஆறவைத்து கொள்ளவும்.
- ஒரு டம்ளர் வைத்து நன்கு காய்கறிகளை மசித்து கொள்ளவும்.
- ஒரு கனமான கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
- அவை நன்கு வதங்கியதும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் லேசாக வதங்கியதும் மிளகாய் தூள், மஞ்சள்தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.
- பின் மசித்த காய்கறி கலவை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வரட்டவும்.
- அவை நன்கு வரண்டதும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
- ஒரு சிறிய பவுலில் 1/2 கப் மைதா மாவை 3/4 கப் தண்ணீர் விட்டு நன்கு கரைத்து வைக்கவும்.
- பிரெட் துண்டுகளை மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
- காய்கறி கலவை நன்கு ஆறியதும் பொடித்து வைத்த பிரெட் கிரம்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். கலவையை கைகளால் உருட்டும் போது ஒட்டாமல் இருக்க வேண்டும். தேவைப்பட்டால் மேலும் பிரெட் கிரம்ஸ் சேர்த்து கொள்ளவும்.
- பின் பெரிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பின் நடுவில் லேசாக அழுத்தி வடை போல் செய்து கொள்ளவும்.
- இப்போது ஒவ்வொரு கட்லெடையும் கரைத்து வைத்துள்ள மைதாவில் இரண்டு பக்கங்களிலும் நன்கு பிரட்டி கொள்ளவும்.
- பின் பிரெட் கிரம்ஸில் நன்கு இரண்டு அல்லது மூன்று முறை பிரட்டி தனியே ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
- கனமான குழிவான வாணலியில் 1/4 கப் எண்ணெய் விட்டு மிதமான தீயில் வைத்து சூடாக்கவும்.
- பின் 1 அல்லது 2 கட்லெட் சேர்த்து அதிரசம் சுடுவது போல் மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக சுடவும்.
- 3 கட்லெட் பொரித்த பின் அடுப்பை அணைத்து விட்டு சிறிது ஆறியதும் பின் 1/4 கப் எண்ணெய் விட்டு கட்லெட்களை பொரித்து எடுக்கவும்.
- கனமான இரும்பு தோசைக்கல்லில் கட்லெட்களை எண்ணெய் விட்டு பொன்னிறமாக சுடலாம்.
- தக்காளி கெட்சப் அல்லது புதினா சட்னி வைத்து சூடாக பரிமாறவும்.
Vegetable Cutlet recipe with step by step instructions and photos
Comments
Post a Comment