தேங்காய்ப்பாலில் இருக்கும் பல்வேறு மருத்துவ குணங்களை நாம் மறந்து விட்டு நாம் பல்வேறு டின்களில் இருக்கும் ஜூஸை அருந்துகிறோம். இந்த தேங்காய்ப்பால் கறிவேப்பிலை ஜுஸ் காலை உணவாக உட்கொள்ளும் போது அந்த நாள் முழுவதும் நாம் சுறுசுறுப்பாக இருக்க முடியும். குறிப்பாக யோகா செய்வதற்கு இரண்டு மணி நேரம் முன்பு இந்த கறிவேப்பிலை தேங்காய்ப்பால் ஜுஸ் அருந்தினால், உடற்பயிற்சிகள் செய்வதற்கு இலகுவாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் - 1 மூடி
- கறிவேப்பிலை - 20 இலைகள்
- ஊறவைத்த பாதாம் பருப்பு - 5
செய்முறை
- தேங்காயைத் துருவிக் கொள்ளவும். ஒரு பெரிய மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், கறிவேப்பிலை, ஊறவைத்த பாதாம் பருப்பு மற்றும் 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு அரைக்கவும்.
- பின் ஒரு வெள்ளைத் துணியில் அல்லது பெரிய அரிப்பில் வைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
- அரைத்த தேங்காய் கறிவேப்பிலை பாதாம் விழுதை மீண்டும் சிறிது தண்ணீர் விட்டு நன்கு அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். நன்கு கலந்து பரிமாறவும்.
குறிப்பு
இதில் கறிவேப்பிலைக்கு பதிலாக கொத்தமல்லி இலை அல்லது புதினா இலைகள் வைத்து அரைக்கலாம்.
Comments
Post a Comment