நமது சமையலில் அன்றாடம் பயன்படுத்தும் கேரட் மற்றும் தக்காளியை வைத்து சுவையான சூப் செய்திடலாம். சூப் கெட்டியாக சேர்க்கும் சோளமாவு அல்லது மைதாமாவு இதற்கு தேவையில்லை. காய்கறி சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு இதை வாரம் இருமுறை செய்து கொடுங்கள்.
தேவையான பொருட்கள்
- கேரட் - 3
- தக்காளி - 3
- மிளகு - 1 டேபிள்ஸ்பூன்
- வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
செய்முறை
- கேரட்டை நன்றாக கழுவி விட்டு தோலை சீவி, பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் . தக்காளியை நன்கு கழுவி நறுக்கிக் கொள்ளவும்.
- ஒரு சிறிய பிரஷர் குக்கரில் நறுக்கிய கேரட், தக்காளி, மிளகு மற்றும் காய்கறிகள் முழ்கும் வரை தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும். பின் 2 விசில் வரும் வரை வேகவைத்துக் கொள்ளவும்.
- பின் குக்கரை திறந்து வேகவைத்த காய்கறிகளை நன்கு ஆறவைத்துக் கொள்ளவும்.
- ஒரு பெரிய மிக்ஸி ஜாரில் வேகவைத்த காய்கறிகளை நன்கு அரைத்துக் கொள்ளவும். பின் ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும். அதோடு மேலும் 2 கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும். சூப் நன்கு கொதித்ததும் வெண்ணெய் சேர்த்து கலந்து சூடாக பரிமாறவும்.
Comments
Post a Comment