தேவையான பொருட்கள்
- 1 சிறிய காலிஃப்ளவர்
- 2 உருளைக்கிழங்கு
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1 பச்சை மிளகாய்
- 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள்
- 1/4 கப் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை
- 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
- உப்பு தேவையான அளவு
- காலிஃப்ளவர் பூக்களை கொதிக்கும் நீரில் சிறிது உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். பின் தண்ணீரை வடிகட்டவும்.
- உருளைக்கிழங்கை தோல் சீவி நறுக்கிக் கொள்ளவும்.
- 2 லிட்டர் சிறிய பிரஷர் குக்கரில் அல்லது பேனில் 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம் போட்டு தாளிக்கவும்.
- பின் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- அவை வதங்கியதும் உருளைக்கிழங்கு சேர்த்து கைவிடாமல் வதக்கவும்.
- உருளைக்கிழங்கு வதங்கியதும் வடிகெட்டிய காலிஃப்ளவர் சேர்த்து நன்கு வதக்கவும்.
- பின் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து சமமாக கிளறவும். விருப்பப்பட்டால் சிறிது கரம் மசாலா தூள் சேர்த்து கொள்ளலாம்.
- மேலும் 2 நிமிடங்கள் வதக்கவும்.
- இப்போது குக்கரின் மூடியை போடுங்கள். மிக குறைந்த தீயில் வைக்கவும்.
- லேசாக ஆவி வரும் போது குக்கரின் விசிலை போட்டு அடுப்பை அணைத்து விடவும்.
- 10 நிமிடங்கள் கழித்து குக்கரை திறந்து ஒரு கை கொத்தமல்லி இலை தூவி கிளறி இறக்கவும்.
Comments
Post a Comment