- 3 மாங்காய்
- 1/2 டேபிள் ஸ்பூன் வெந்தயம்
- 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள்
- 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
- சிறிய துண்டு வெல்லம்
- 1 டீஸ்பூன் கடுகு
- 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
- 8 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
- கல் உப்பு தேவையான அளவு
செய்முறை
- மாங்காயை நன்றாக கழுவி தோல் சீவிக் கொள்ளவும்.
- அதில் 2 மாங்காய்களை கேரட் துருவியில் பொடியாக துருவிக் கொள்ளவும். 1 மாங்காயை சிப்ஸ் சீவும் கட்டையில் துருவிக் கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து லேசாக சூடாக்கி அதில் வெந்தயத்தை சேர்த்து நன்கு வாசம் வரும் வரை வறுக்கவும். பின் ஒரு தட்டில் மாற்றி ஆறவைத்து ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.
- ஒரு கனமான கடாயில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் அதில் கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து சீவிய மாங்காய்த்துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கவும்.
- அவை சிறிது வதங்கியதும் துருவிய மாங்காயை சேர்த்து நன்கு வதக்கவும்.
- அதோடு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து சிறிது நேரம் எண்ணெயில் வேகவிடவும்.
- மாங்காய் நன்கு வெந்ததும் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- மாங்காயோடு மிளகாய்த்தூள் நன்கு கலந்ததும் வெல்லம் சேர்த்து நன்கு கலந்து கிளறவும்.
- தொக்கு நன்கு கெட்டியான பின் வறுத்து பொடித்த வெந்தயப்பொடி சேர்த்து நன்கு கலந்து இறக்கவும். நன்கு ஆறியதும் கண்ணாடி பாட்டிலில் மாற்றிக் கொள்ளவும்.
Comments
Post a Comment