தேங்காய் பராத்தா மிக எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய எளிமையான உணவாகும். எந்த வயதினருக்கும் ஏற்றது. தேவையான பொருட்கள் கோதுமை மாவு - 2 கப் தேங்காய்காய் துருவல் - 1 கப் பச்சை மிளகாய் - 1, பொடியாக நறுக்கிக் கொள்ளவும் புதினா - 4 இலைகள் கொத்தமல்லி இலை - சிறிதளவு நெய் - 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் தேவையான அளவு உப்பு தேவையான அளவு செய்முறை ஒரு அகலமான பவுலில் கோதுமை மாவு, நெய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மாவு கைகளில் ஒட்டாத பதம் வரும் வரை பிசைந்து கொள்ளவும். மாவின் மேலே சிறிது எண்ணெய் தடவி 20 நிமிடங்கள் வைக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் புதினா சேர்த்து லேசாக வதக்கவும். பின் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வதக்கவும். அவை நன்கு வதங்கியதும் ஒரு சிறிய கிண்ணத்தில் மாற்றி ஆறவிடவும். பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பின் சிறிய சப்பாத்தியாக போட்டு நடுவில் 1 டேபிள் ஸ்பூன் வதக்கிய தேங்